கோவையில் மாணவர் மாயம்; குளகரையில் புத்தகப் பை இருந்ததால் பரபரப்பு!

கோவை: கோவையில் கல்லூரி மாணவர் மாயமான நிலையில், அவரது புத்தகப்பை குளக்கரை அருகே கிடந்ததால், தீயணைப்புத்துறையினர் குளத்தில் குதித்து மாணவரைத் தேடி வருகின்றனர்.

Advertisement

செல்வபுரம் அருகே உள்ள தெலுங்குபாளையம் எல்ஐசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் சுபாஷ் (19). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார்.

இந்த நிலையில் சுபாஷ் நேற்று காலை வழக்கம் போல கல்லூரிக்கு சென்றார். மாலை வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தாயார் சுபாஷுக்கு அழைத்து கேட்டுள்ளார்.

அதற்கு சுபாஷ் தேர்வில் மதிப்பெண் குறைவாக வாங்கியதால் மன உளைச்சலில் இருப்பதாக கூறியுள்ளார். அவரைப் பெற்றோர் சமாதானப்படுத்தி உள்ளனர்.

Advertisement

ஆனாலும் சுபாஷ் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது உக்கடம் பெரியகுளத்தில் கரையில் ஒரு புத்தகப்பை கிடந்துள்ளது. அதனை பார்த்த போது சுபாஷின் புத்தகப்பை என்று தெரியவந்தது.

இதைக் கண்டு சுபாஷின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவரை கண்டுபிடித்து தரும்படி பெரிய கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Advertisement

உடனே பெரிய கடை வீதி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அருகில் தேடி பார்த்தனர் . ஆனால் அவர் கிடைக்கவில்லை.

குளகரையில் புத்தகப்பை அனாதையாக கிடந்ததால் சுபாஷ் குளத்தில் குதித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து
நேற்று இரவு கோவை தெற்கு தீயணைப்பு வீரர்கள் 7 பேர் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் குதித்து மாணவன் சுபாஷை தேடினர்.

ஆனால் இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால் தேடும் பணி பாதிக்கப்பட்டது.
அதன் பிறகு இரவில் தேடும் பணியை கைவிட்டுவிட்டு தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் திரும்பிச் சென்றனர்.

இன்று காலை மீண்டும் உக்கடம் பெரியகுளத்திற்கு சென்று தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பெரியகுளம் ஆழமான பகுதி என்பதால் தேடும் பணி சிரமமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் உக்கடம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், சுபாஷ் வேறு எங்காவது சென்று உள்ளாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுக- வார்டு மக்களுடன் கோவை கவுன்சிலர் தர்ணா…

கோவை: தன்னை சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும் என்று வார்டு மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி... தன்னை களங்கப்படுத்தியதாக கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.