உக்கடத்தில் ஆயிரக்கணக்கில் போதை மாத்திரைகள்!

கோவை: உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே வாலிபரிடம் இருந்து ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். போலீசார் பல்வேறு இடங்களில் ரோந்து சென்று கண்காணித்து போதை பொருட்களை கடத்தி வருபவர்கள், விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள மின்வாரியம் அலுவலகம் அருகில் உக்கடம் போலீசார் ரோந்து சென்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவரிடம் 1,470 போதை மாத்திரைகள் மற்றும் 250 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாணையில் அவர் கோவைப்புதூர் அறிவொளி நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த முகமது தாரிக் (25) என்பதும், அவர் புனேயில் உள்ள மருந்துக் கடையில் இருந்து போதை மாத்திரைகளை கோவைக்கு கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

அதேபோல கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் எஸ்.ஐ.,க்கள் சேகர், தனபால், தலைமை ஏட்டு பாபு ஆகியோர் ரகசிய தகவலின் பேரில் இடையர்பாளையம் மாசாணியம்மன் நகர் பகுதியில் கண்காணித்து கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த வாலிபரை படித்து சோதனை செய்தனர். அதில் அந்த வாலிபரிடம் போதை மாத்திரை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர் கர்நாடகாவில் இருந்து போதை மாத்திரை கடத்தி வந்து, சிறிய அளவிலான பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைத்து இளைஞர்களை குறி வைத்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட கேரளா மாநிலம் இடுக்கியை சேர்ந்த ரமேஷ் (27) என்பவரை பிடித்து கவுண்டம்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து போதை மாத்திரை 80 கிராம், விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை மாநகரில் ஆலங்கட்டி மழை- உற்சாகமடைந்த குழந்தைகள்…

கோவை: கோவை மாநகரில் சரவணம்பட்டி, காளப்பட்டி, சின்னவேடம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் குழந்தைகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வரும் நிலையில் கோவையில் கடந்த சில தினங்களாகவே அதிக...

Video

தடாகம் பகுதியில் கும்பலாக சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகள்…

தடாகம் அருகே வரப்பாளையத்தில் இரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் கூட்டம் வாழைமரங்கள், விவசாய நிலங்களை சேதப்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகின.