ரயில் மோதி தாய் பலி; மகன் படுகாயம்… கோவையில் சோகம்!

கோவை: கோவையில் ரயில் மோதி பெண் ஒருவர் பலியானார். அவரது மகன் படுகாயமடைந்தார்.

புரூக்பீல்டு மால் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாள பகுதியில் நேற்று முன்தினம் பெண் மற்றும் வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

Advertisement

அதன்பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த பெண் உயிரிழந்தது தெரியவந்தது. வாலிபர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.

அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், அவர்கள் கர்நாடகாவை சேர்ந்த நவீனா (58), அவரது மகன் மனோகர் (28) என்பது தெரிய வந்தது.

இருவரும் சமீபத்தில் கோவை ஈஷா யோகா மையம் செல்ல வந்ததாக தெரிகிறது. ஆனால், அவர்கள் எதற்காக புரூக்பீல்டு ரயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றனர் என தெரியவில்லை.

அவர்கள் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி அந்த பெண் பலியானாரா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து கோவை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு…

கோவை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யபட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த...

Video

கோவையில் போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட போதை இளைஞர்…

கோவை டவுன் ஹால் பகுதியில் மதுபோதையில் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டு மிரட்டிய நபரை உக்கடம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.