கோவையின் டாப் 10 CBSE பள்ளிகள் 2026 – முழு விவரம் இதோ!

கோவை: கோவையில் செயல்பட்டு வரும் டாப் 10 CBSE பள்ளிகள் என்னென்ன? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களது குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என்பது கனவு. அதே நேரத்தில் குழந்தையை எந்தப் பள்ளியில் சேர்ப்பது? எது நல்ல பள்ளி? என்று தீர்மானிப்பதில் பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பமும், சவாலும் நீடிக்கிறது.

இதனிடையே கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாப் 10 CBSE பள்ளிகளை அவற்றின் கல்வி, தரம், திறன் மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்து கீழே தொகுத்துள்ளோம்.

டாப் 10 CBSE பள்ளிகள்

இந்த பள்ளி வெள்ளலூர் சாலையில் பட்டணம் அருகே அமைந்துள்ளது. இப்பள்ளி, பாடத்திட்டத்துடன் NEET, JEE, SAT, NATA போன்ற போட்டித்தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சியை மாணவர்களுக்கு வழங்குகிறது.

top 10 cbse schools in Coimbatore

விளையாட்டு, கலை மற்றும் திறன் வளர்ப்பு போன்றவற்றின் மூலம் மாணவர்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இத்துடன் நூலகம், ரோபோட்டிக்ஸ் அறிவியல் மற்றும் மொழிகளுக்கான சிறப்பு ஆய்வகங்களும் இப்பள்ளியில் உள்ளன.

துடியலூர் ரோடு கணுவாய் அருகே இப்பள்ளி அமைந்துள்ளது. பாடத்திட்டத்துடன் கேள்வி அடிப்படையிலான கற்றல், ரோபோட்டிக்ஸ் ஆய்வகங்கள், நூலகங்கள், ரோலர் ஸ்கேட்டிங் மைதானம், குதிரை சவாரி போன்ற சிறப்பம்சங்கள் இப்பள்ளியில் உள்ளன.

டாப் 10 CBSE பள்ளிகள்

இத்துடன் சுற்றுசூழல் நட்பு நடைமுறைகளுக்காக 234 வகை மரங்களுடன் மியாவாக்கி காடும் இப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாக உள்ளது.

வடவள்ளி-தொண்டாமுத்தூர் சாலையில் இப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஸ்மார்ட் வகுப்பறைகள், நூலகங்கள், அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள் போன்றவற்றுடன் இசை, நடனம், கலை, விளையாட்டு, நவீன ஜிம் போன்ற வசதிகள் உள்ளன.

best school in coimbatore

இத்துடன் மாணவர் கவுன்சில் அமைப்பு செயல்படுகிறது. இது மாணவர்கள் மத்தியில் தலைமைத்துவ திறன்களை வளர்க்க உதவுகிறது.

வடவள்ளி-தொண்டாமுத்தூர் சாலையில் இப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் பாடத்திட்டத்துடன் யோகா, இசை, விளையாட்டு, போர்க்கலை போன்றவை கற்பிக்கப்படுகின்றன. இத்துடன் நவீன ஆய்வகங்கள், நூலகங்கள் மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஆகியவை உள்ளன.

top 5 cbse schools in coimbatore

மாணவர்களின் நெறிமுறைக் கல்வி, தேசப்பற்று மற்றும் உலகளாவிய பார்வை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

துடியலூர்–சரவணம்பட்டி சாலையில் வெள்ளக்கிணறு அருகே அமைந்துள்ளது எஸ்.என்.எஸ் அகாடமி பள்ளி.

இப்பள்ளியில் பாடத்திட்டத்துடன் Design Thinking என்ற முறையை இணைத்து அனுபவ அடிப்படையிலான கற்றலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.

டாப் 10 பள்ளிகள் கோவை

இத்துடன் நூலகம், சிறப்பு ஆய்வகங்கள் ஆகியவை உள்ளன. ஜிம், விளையாட்டு மற்றும் உடல்நலம் தொடர்பான “SNS SPINE” நிலை செயல்பாட்டு மையம் இங்கு செயல்பட்டு வருகிறது.

கணபதியை அடுத்த மணியகாரம்பாளையத்தில் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு உலகளாவிய பாடத்திட்டத்துடன் மேம்பட்ட வகுப்பறைகள், நூலகம், ஆய்வகம், விளையாட்டுகளுக்கு தனித்தனி மைதானங்கள் உள்ளன.

கோவை டாப் 10 பள்ளிகள்

இசை, நடனம், சமையற்கலை போன்ற கிளப்புகளும் செயல்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் நடைபெறும் பள்ளி ஆண்டுவிழா மூலம், மாணவர்கள் தங்களது திறனை வெளிப்படுத்த மேடை அமைத்துக் கொடுக்கிறது இப்பள்ளி.

சேரன் மாநகர் மற்றும் புலியகுளம் பகுதிகளில் வித்யா நிகேதன் பள்ளி அமைந்துள்ளது.

best cbse schools in coimbatore

இப்பள்ளி மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் முறையை மதித்து உயர்தரமான கல்வியை மலிவான கட்டணத்தில் வழங்குகிறது. சின்தெடிக் கால்பந்து மைதானம், தரமான உள்விளையாட்டு அரங்கம், நூலகங்கள் இப்பள்ளியின் சிறப்பம்சமாகும்.

அவினாசி சாலை உப்பிலிபாளையம் அருகே அமைந்துள்ளது இப்பள்ளி.

கோவையில் உள்ள பழமை வாய்ந்த பள்ளிகளுள் ஒன்றான ஸ்டேன்ஸ் பள்ளியில் பல்வேறு பாடத்திட்டங்களின் கீழ் கல்வி வழங்கப்படுகின்றது.

Coimbatore cbse schools

நவீன ஆய்வகங்கள், கல்வி, இசை, கலைக்கு இப்பள்ளியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மேலும், விளையாட்டிற்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

கோவைப்புதூரில் அமைந்துள்ளது CS Academy.

இப்பள்ளி பாடத்திட்டத்துடன் திறன் வளர்ச்சி, மாணவர் மையக் கற்றல், சிறப்பு கிளப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

top 10 schools in coimbatore

நீச்சல் குளம், டென்னிஸ் மைதானம், கிரிக்கெட் போன்ற சிறந்த விளையாட்டு வசதிகள் உள்ளன.

அவினாசி ரோட்டில் பீளமேடு பகுதியில் அமைந்துள்ளது PSG Public School.

best school in coimbatore

இப்பள்ளியில் பாடத்திட்டத்துடன் JEE/NEET ஒருங்கிணைந்த பயிற்சி வழங்கப்படுகிறது. மதிப்பியல் கல்வி, விளையாட்டு, நூலகங்கள், ஆய்வகங்கள், கலை, இசை, உடற்பயிற்சி ஆகியவற்றில் சமமான கவனம் செலுத்தப்படுகிறது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

புதிய உக்கடம் பேருந்து முனையத்தில் உள்ள வசதிகள்…

கோவை: நவீன மயமாக்கப்பட்ட உக்கடம் பேருந்து முனையம் இன்று முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வசதிகள் உள்ளன. கோவையில் உக்கடம் பகுதி என்பது மக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கிய பகுதிகளில் ஒன்றாக விளங்கி...

Video

கோவையில் காரை கரப்பான் பூச்சி போல் கவிழ்த்துவிட்டு மட்டை – வீடியோ

கோவை அருகே தாறுமாறாக வந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்த நிலையில், போதையில் இருந்த டிரைவர் அங்கேயே படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.