ரஜினி ரசிகர்களின் ஒரு ஓட்டு கூட விஜய்யின் தவெகவுக்கு விழுகாது என ரசிகர்கள் வீடியோ வெளியிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விஜய் மீது ரஜினி ரசிகர்கள் கோபமடைய காரணம் நேற்று நடந்த தவெக கண்டன கூட்டம். ஆம், நேற்று மாநிலம் முழுவதும் தமிழக அரசுக்கு எதிராக தவெக கண்டன கூட்டம் நடந்தது.
வாயை கொடுத்து சிக்கிய ஆதவ் அர்ஜூனா
அதில் கலந்து கொண்டு பேசிய தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, எம்ஜிஆருக்கு பிறகு ரஜினிதான் வந்திருக்க வேண்டும். ஆனால் திமுக அவரை மிரட்டி அரசியலுக்குள் நுழைய விடாமல் செய்தது. ஆனால் விஜய் அப்படிப்பட்டவர் இல்லை, வலிமை மிக்கவர் என பேசினார்.

ஆதவ் அர்ஜூனாவின் இந்த பேச்சு, ரஜினி ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியை திமுக மிரட்டியது என கூறிய கருத்து ஏற்றுக்கொள்ளமுடியாது என கூறும் ரஜினி ரசிகர்கள், இணையத்தில் ஆதவ் அர்ஜூனாவுக்கு எதிராக விமர்சனம் செய்து வருகின்றனர்.
தவெகவுக்கு எங்கள் ஓட்டு இல்லை
இணையத்தில் வைரலாகும் ரஜினி ரசிகரின் வீடியோவில், நாடி துடிப்பது உயிருக்காக, உயிரே இருப்பது ரஜினிக்காக என பதிவிட்ட அந்த ரசிகர், ரஜினியை யாராவது மிரட்ட முடியுமா? இனி எங்கள் ஓட்டு ஒன்று கூட தவெகவுக்கு கிடைக்காது என காட்டமாக பேசியுள்ளார்.
அரசியலில் நுழையாவிட்டாலும், ஆண்ட முதலமைச்சர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவை மேடையிலேயே விமர்சித்து பேசியவர் எங்கள் சூப்பர் ஸ்டார்.
இந்த வரலாறு எல்லாம் ஆதவ் அர்ஜூனாவுக்கு தெரிய வாய்ப்பில்லை. ரஜினி சொல்வதை போல, கூட இருந்து குழி பறிக்கும் துரோகியை மன்னிக்க மாட்டோம் என்பது போல, தவெகவை நாங்கள் என்றும் மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம் என கூறியுள்ளார்.
நாடி துடிப்பது உயிருக்காக
— CUCKOO VINOTH.A (@CuckooVinoth) March 12, 2026
உயிரே இருப்பது ரஜினிக்காக
🤘💪💪💪💪💪💪💪@rajinikanth .sir@mayavarathaan @RBSIRAJINI@RajiniFollowers @OnlineRajiniFC @RajiniFansTeam1 @RajiniTrendPage @ThalaAjith_FC pic.twitter.com/vClFzq9lD6
இது போல ஆதவ் அர்ஜஜூனாவுக்கு எதிராக பல விமர்சனங்கள் இணையத்தில் ரஜினி ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.
தவெக சுற்றி பல விமர்சனங்கள், சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், வாய்க்கு வந்ததை பேசி வம்பை விலைக்கு வாங்கியுள்ளார் ஆதவ் அர்ஜூனா என்ற கருத்துகளும் மேலோங்கி வருகிறது.



I strongly condemn the dragging of Mr. Rajanikanth in TVK campaign . Your team need experience to adress the public meetings and its repercussions. Did he interfere in your affairs? Let your leader be strong in every thing. Nobody objected. Please exercise fairness in your campaigns. Please Sir….