கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவை: கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

Advertisement

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி கல்லூரி(CRPF) இயங்கி வருகிறது. வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால் வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகளவு இருக்கும்.

அவ்வப்போது வனத்திற்குள் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அந்த கல்லூரியை சுற்றி திரியும். மேலும் அங்குள்ள ஊருக்குள்ளும் புகும் யானைகள் சேதங்களை விளைவித்து செல்கின்றன.

இந்லையில் நேற்று இரவு CRPF முகாமிற்குள் நுழைந்த ஒற்றைக் காட்டு யானை சமையலறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை சேதப்படுத்தி அரிசி, மாவு பொருட்கள் ஆகியவற்றை சாப்பிட்டு சென்றுள்ளது.

Advertisement

யானை முகாமிற்குள் நுழைந்து உணவு சாப்பிடுவதை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்திருந்த நிலையில் தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...