விஜய் அவசரமாக மும்பைக்கு போனது இதுக்குதானா? அட்லீ விட்டு விசேஷத்திலும் சர்ச்சை!

தவெக தலைவர் விஜய் நேற்று அவசர அவசரமாக மும்பை கிளம்பிய விஷயம் இணையத்தில் பெரும் விவாதிற்குள்ளாகியுள்ளது.

நடிகர் விஜய், தவெக என்ற கட்சியை ஆரம்பித்து 3 வருடமாகியுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தியே ஆரம்பிக்கப்பட்டதாக கூறிய விஜய், பம்பரம் போல தேர்தலில் போட்டியிட பணியாற்றி வருகின்றார்.

Advertisement

ஒரு பக்கம் மக்கள் சந்திப்பு, போராட்டம் என அரசியல் கூட்டங்களில் பங்கேற்றாலும், மறுபுறம் சினிமா பிரபலங்களில் திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றார்.

Vijay Sange

இதனிடையே அவர் மீது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு பல்வேறு புகார்கள் கூறியது பெரும் புயலை கிளப்பியது. திருமணத்தை மீறிய உறவில் நடிகையுடன் இருப்பதாகவும், தனக்கு நெருக்கடி ஏற்பட்டால் அந்த நடிகையின் பெயரை பொதுவெளியில் கூறுவேன் என தடாலடியாக அறிவித்தார்.

ஆனால் இதை பற்றி எதுவும் கண்டுகொள்ளாத விஜய், அடுத்த சில நாட்களிலேயே, நடிகை திரிஷாவுடன் சினிமா தயாரிப்பாளர் வீட்டு விசேஷத்தில் ஜோடியாக பங்கேற்றது பேசுபொருளானது.

Advertisement
Vijay trisha at event

இதைத்தவிர, தவெக சார்பாக நடத்தப்பட்ட மகளிர் மாநாட்டில், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட விஜய், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம், நீங்கள் கவலைப்படுவது தான் எனக்கு கவலையாக உள்ளது, அந்தளவுக்கு அது ஒர்த் இல்லை என பேசினார்.

லைகாவுக்கு ஆதரவு.. சொன்னதை செய்து காட்டிய மணிரத்னம்! READ news

இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. மனைவியின் வாழ்க்கையை ஒர்த் இல்லை என அவர் பேசியது மகளிர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், விவாதத்திற்குள்ளானது. ஆனால் இதைபற்றி எல்லாம் கண்டுகொள்ளாத விஜய் தனது மனம் போகும் போக்கில், அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு மும்பைக்கு விஜய் பறந்துள்ளார். ஜனநாயகன் படத்திற்காக சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாகவும், சூட்டிங் நடத்த செல்வதாகவும் முதலில் சொல்லப்பட்டது.

பின்னர்தான் அட்லீ மனைவி பிரியா அட்லீக்கு நடந்த வளைகாப்பு விஷேசத்தில் பங்கேற்க அவர் சென்றது தெரியவந்தது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் நெட்டிசன்கள் போட்ட பதிவுதான் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சில நாட்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் திரிஷா, வந்திருந்தார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் சென்றார்.

அவர் தற்போது மும்பையில்தான் உள்ளார் என்றும்,. விஜய்யும் அட்லீ வீட்டு விசேஷத்துக்காக மும்பை சென்றதாகவும், விஜய் – திரிஷா இருவரும் ஜோடியாக அந்த விசேஷத்தில் கலந்திருக்கலாம் என சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.

ஆனால் மீண்டும் விஜய், திரிஷாவுடன் ஜோடி போட்டு சென்றால், அரசியலில் எதிரொலிக்கும் என்பதால் விஜய் தரப்பு அதையெல்லாம் தவிர்த்து வருகிறதாகவும் அரசியலில் பேச்சு எழுந்துள்ளது.

Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

விஜய் வெற்றி.. சொன்னதை செய்த பாண்டா.. அப்போ பாண்டே?

விஜய்க்கு எதிராக சவால் விட்டு பிரசாந்த் ரங்கசாமி மொட்டை அடித்து கொண்டது போல் ரங்கராஜ் பாண்டேவும் சொன்னதை செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மொட்டை போட்ட பாண்டா ஆரம்பத்தில் பிரசாந்த் ரங்கசாமி நடிகர் விஜய் குறித்து...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...