44 வயதில் அனுஷ்காவுக்கு திருமணம்..? Age Shaming செய்வது நியாயமா!

44 வயதில் திருமணம் செய்தால் என்ன தவறா என்றும், Age Shaming செய்வது குறித்து அனுஷ்கா தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நடிகை அனுஷ்கா, 2005ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ரெண்டு படம் மூலம் தமிழில் அறிமுகமான அவர், சூர்யா, விஜய், அஜித், விக்ரம் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

பின்னர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடித்து, ஹீரேவாக நடித்தார். அவருக்கு வாய்ப்புகள் கொட்டியது. முதன்முறையாக நாயகிகள், நாயகனாக நடிக்கும் பழக்கத்தை கொண்டு வந்ததே அனுஷ்காதான்.

Anushka

அருந்ததி படம் மூலம் இந்தியா முழுவதும் பேசப்பட்ட அவர், பாகுபலி, ருத்ரமாதேவி படத்தில் தனி முத்திரை பதித்தார். உடல் எடை ஏறியதால், மார்க்கெட்டை இழந்த அனுஷ்கா, திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் பரவியது.

Advertisement

Click here to Read news விஜய் அவசரமாக மும்பைக்கு போனது இதுக்குதானா? அட்லீ விட்டு விசேஷத்திலும் சர்ச்சை!

ஆனால் வயது 40ஐ கடந்தும் இன்னும் திருமணமாகவில்லை. சமீப நாட்களாக மீண்டும் அனுஷ்காவுக்கு திருமணம் என்ற பேச்சு இணையத்தில் கொடி கட்டி பறக்க தற்போது அனுஷ்காவின் டீம் அதை மறுத்துள்ளது.

Advertisement
Prahas Anushka

அனுஷ்கா டீம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகை அனுஷ்காவை சுற்றி வெளியாகும் செய்திகள் குறித்து அவரது தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, எந்த தகவலையும் உறுதி செய்யாமல், ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை நேரடியாக தலைப்பு செய்தியாக மாற்றுவது எவ்வளவு பொறுப்பற்ற செயலாக இருக்கிறது என்பதையே அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Click here to read news தேர்தல் முடிந்ததும் ஜனநாயகன் ரிலீஸ்.. பக்கா பிளான் போட்ட விஜய்.?

“ஒரு மனிதரின் வாழ்க்கையை பற்றி எழுதும் முன், குறைந்தபட்சம் அந்த நபரிடம் உறுதி செய்துகொள்ள வேண்டிய அடிப்படை பத்திரிகை நெறிமுறையே பல இடங்களில் பின்பற்றப்படவில்லை. ஊகங்கள் மற்றும் ஆதாரமற்ற தகவல்களை sensational ஆக மாற்றுவது சரியானதா?” என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Anushka Shetty

மேலும், கடந்த சில நாட்களாக வெளியாகும் பல செய்திகளில் அனுஷ்காவின் வயது—44—என்பதை தொடர்ந்து முன்னிறுத்தி பேசப்படுவது குறித்து கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஒருவரின் வயதை இவ்வளவு பெரிய விஷயமாக்குவது ஏன்? அது ஏதேனும் குறையா? அல்லது அதைப் பயன்படுத்தி ஒருவரை மதிப்பிடுவது சரியானதா?” என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இது நேரடியாக “age shaming” ஆக மாறிவிட்டதாகவும், பெண்களை குறிவைத்து இவ்வாறு செய்திகளை உருவாக்குவது கவலைக்கிடமான போக்காகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். “வயது முக்கியம் என்றால், அதே அளவிலான கவனத்தையும், அதே ‘energy’-யையும் ஆண் நடிகர்களின் வயது பற்றியும் காட்ட முடியாதா? ஏன் இந்த வேறுபாடு?” எனவும் அவர்கள் சாடியுள்ளனர்.

பெண்கள் குறித்து மட்டும் இவ்வாறு தனிப்பட்ட அம்சங்களை பெரிதுபடுத்தி பேசும் நடைமுறை மாற்றப்பட வேண்டியது அவசியம் என்றும், பொறுப்புடன் மற்றும் மரியாதையுடன் செய்திகளை வெளியிட வேண்டும் என்பதே அனுஷ்கா தரப்பின் வலியுறுத்தலாகும்.

Flipkart Link 1
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

ஓடிடியில் சுதந்திர தின வருகையாக வரும் ‘பாரத் பாக்ய விதாத்தா’! வரிசை கட்டி நிற்கும் 9 படங்கள்…!

கடந்த இரு தினங்களில் வெளியான மற்றும் அடுத்த வாரம் வெளியாக உள்ள OTT படங்கள், வெப் சீரிஸ்கள் குறித்த முக்கிய தகவல்கள் ரசிகர்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளன.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.