விஜய் எந்த தொகுதியில் போட்டி? கிழிச்சு தொங்க விடறேன்.. ஜூலி காட்டம்!

பெயரை குறிப்பிடாமல் தவெக தலைவர் விஜய்யை மீண்டும் வம்புக்கு இழுத்துள்ளார் பிக் பாஸ் பிரபலமான ஜூலி.

Advertisement

ஏற்கனவே விஜய் குறித்து வீடியோவில் பேசி வாங்கிக் கட்டிக்கொண்ட ஜூலி, தற்போது மீண்டும் விஜய்யை சீண்டியுள்ளார்.

நடிகையும் Bigg Boss நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி, வெளியிட்ட அந்த வீடியோவில், பெயரை நேரடியாக குறிப்பிடாமல் ஒருவரை குறிவைத்து கடுமையான கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளார்.

குஷ்புவுக்கு கிடைக்காத வாய்ப்பு.. திமுக கோட்டையில் சுந்தர்.சி போட்டி!

Advertisement

டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தது குறித்து விமர்சித்த அவர், “ஒரு பெரிய கூட்டத்தை வைத்துக்கொண்டு இவ்வாறு புகார் கொடுப்பது சரியானதா? அதற்கு முன் யோசிக்க வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பினார்.

Vijay And Julie

மேலும், சிலர் நடத்தும் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து, பெண்களை தவறாக பயன்படுத்தும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். “ஒரு பெண் உங்களுடன் புகைப்படம் எடுக்க வரும்போது, அதை தவறாக பயன்படுத்தும் நிலை உருவாகியிருக்கிறது. இது எல்லாம் உங்களுக்கு தெரியாமலா நடக்கிறது?” என்று சாடியுள்ளார்.

Advertisement

இருக்கும் போது அக்கா.. வெளியே வந்ததும் அநாகரிகமா? விஜய் மீது நடிகை புகார்!

அதோடு, சமூக வலைத்தளங்களில் சிலரை ‘விர்ச்சுவல் வாரியர்ஸ்’ என குறிப்பிடும் அவர், இத்தகைய செயல்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறினார்.

அரசியல் குறித்து பேசும்போது, புதியவராக அரசியலுக்கு வரும் ஒருவரை ஆரம்பத்தில் நல்ல எண்ணத்துடன் பார்த்ததாக கூறிய ஜூலி, தற்போது அதில் விரக்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். “நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிடுகிறீர்கள் என்பதை மட்டும் சொல்லுங்கள். அந்த தொகுதிக்கே நான் நேரில் சென்று, பெண்கள் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்வேன்” என அவர் திறந்த சவால் விடுத்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அரசியல் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூலியின் இந்த பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ள தவெக மற்றும் விஜய் ரசிகர்கள், கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர். ஏற்கனவே கிட்னி விவகாரத்தில் ஜூலி பெயரை இணைத்த நிலையில், தற்போதும் சிலர் ஜூலியை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இந்த பிரச்சனை எங்கு கொண்டு போய்விடப்போகுதோ என சிலர் பொத்தம் பொதுவாக கமெண்ட்ஸ்களை போட்டு வருகின்றனர்.

Amazon Link 2
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...