கோவை: கோவையில் யார் போட்டியிட்டாலும் அதிமுகவின் கோட்டை தான் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியிடம் கோவையில் செந்தில் பாலாஜி போட்டியிடுவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், கோவையில் யார் போட்டியிட்டாலும் சரி, கோவை மாவட்டத்தை பொருத்தவரை அம்மா ஜெயலலிதா தலைவர் எடப்பாடியார் 50 ஆண்டு காலம் இல்லாத வளர்ச்சியை கொடுத்துள்ளோம், கோவை அண்ணா திமுகவின் கோட்டை என்றார்.
திமுக மீது மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள் மீண்டும் அதிமுக வந்தால்தான் கோவைக்கு மிகப்பெரிய வளர்ச்சி வரும் என்றும் ஐந்து ஆண்டு காலமாக கோவையில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை மீண்டும் அதிமுக ஆட்சி வந்தால் தான் அதிகப்படியான திட்டங்கள் கோவைக்கு வரும் என்றார்.

