கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி!

கோவை: நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் மாற்றுத்திறனாளிகள் மேற்கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தொடங்கி வைத்தார்.

Advertisement

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் நடத்தி வருகிறது.

Click Here to read news:கோவையில் ஓய்வு பெற்ற தாசில்தாரிடம்ரூ. 45 லட்சம் டிஜிட்டல் மோசடி!

தேர்தல் அறிவிப்பு வெளியானதும், ஏர் பலூனில் பறந்து மாவட்ட ஆட்சியர் வாக்குப்பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், தேர்தல் உறுதி மொழி ஏற்பு, கல்லூரி மாணவர்களின் ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

Advertisement
பவன்குமார்

இதனிடையே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண்டனர்.

Click here to read news கோவை அருகே சிறுத்தை பீதி; “20 நாட்களாக நடவடிக்கை எங்கே?” – அண்ணாமலை கடும் விமர்சனம்

Advertisement

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து இந்தப் பேரணியை ஆட்சியர் பவன் குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு வாகன பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, 100 சதவீத வக்குப்பதிவி அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஆட்சியில் அலுவலகத்தில் தொடங்கி அவிநாசி சாலை, வஉசி பூங்கா, காந்திபுரம் வழியாகச் சென்று செம்மொழி பூங்கா வரை சென்று பேரணியை நிறைவு செய்தனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பேட்மின்டனில் வெற்றிக்கொடி நாட்டி சீனா செல்லும் கோவை வெங்கீஸ் பயிற்சி மைய மாணவி!

சேலத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி அனு ஸ்ரீ, கோவை வெங்கீஸ் பேட்மின்டன் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, சீனாவில் நடைபெறும் ஏசியன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்தியாவுக்காக பதக்கம் வெல்வதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...