கோவை மாவட்ட எல்லையில் உள்ள மதுபான கடைகள் மூட உத்தரவு- மீறினால் நடவடிக்கை…

கோவை: கோவை மாவட்ட எல்லையில் உள்ள மதுபான கடைகளை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கேரள மாநிலத்தில் 2026 ஆம் ஆண்டு கேரள சட்டமன்றப் பொதுத் தேர்தல் 09.04.2026 அன்று நடைபெற உள்ளதால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951இன் பிரிவு 135(C)-இன் கீழ் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோயம்புத்தூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் 5 கி.மீ. சுற்றளவிற்குள் அமைந்துள்ள, அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள மதுக்கூடங்கள், மேலும் FL2 முதல் FL11 வரையிலான (FL6 தவிர) உரிமம் பெற்ற வளாகங்களை 07.04.2026 அன்று 10.00 மணி முதல் 09.04.2026 (வாக்குப்பதிவு நாள்) நள்ளிரவு 12.00 மணி வரையிலும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிமுறைகளுக்கு முரணாக கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கோயம்புத்தூர் மாவட்டம் எல்லைப் பகுதிகளில் 5 கி.மீ. சுற்றளவிற்குள் அமைந்துள்ள மதுபான கடைகளோ மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் மதுபான வகைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான வகைகளை ஓரிடத்திலிருந்து பிற இடத்திற்கு எடுத்துச் சென்றாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்குச்சட்டம் 1937 இன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

நெஞ்சை நிமிர்த்தி வானதி சீனிவாசனுக்கு ஓட்டு கேட்கலாம் – எஸ்.பி.வேலுமணி!

அதிமுக தொண்டர்கள் நெஞ்சை நிமிர்த்தி வானதி சீனிவாசனுக்கு ஓட்டு கேட்கலாம் என எஸ்.பி. வேலுமணி கூறி, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியை நம்பிக்கை தெரிவித்தார்.

Video

கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப்...