6 முறை தோல்வி.. நடிகை ஸ்ருதிஹாசன் எடுத்த திடீர் முடிவு!

நடிகரும், எம்பியுமான கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் எடுத்த முடிவு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

ஸ்ருதிஹாசன், சிறு வயது முதலே சினிமா மீது அதிக மோகம் கொண்டு, நடிப்பு, இசை, பாடல் என பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். ஹே ராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், 7ஆம் அறிவு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

Shruti Cute

பின்னர் தனுஷ், விஜய், அஜித், விஷால் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் கூலி திரைப்படம் வெளியானது. இது தவிர பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் உள்ளார்.

தனது தந்தை கமல் நடித்த உன்னைப்போல ஒருவன் படத்திற்கு இசையமைத்திருந்தார். பாடல்களும் வரவேற்பு பெற்றன. தனது தந்தையை போலவே பன்முகத் திறமையை வெளிப்படுத்தி வரும் நிலையில், ஸ்ருதி எடுத்த முடிவு ரசிகர்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement
Shruti

முன்னதாக ஸ்ருதி தனது காதலரை வெளியுலகுக்கு அறிமுகம் செய்தார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை பதிவிட்டு, தனது காதலர் என அறிவித்தார்.

ஆனால் அவர்கள் சில காலங்களிலேயே பிரிந்து விட்டனர். மேலும் அவருடன் பதிவிட்ட போட்டோக்கள் முழுவதையும் ஸ்ருதிஹாசன் நீக்கினார். காதலரை பிரிந்த பிறகு தனது கேரியரில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement
Shruti Lover

இது குறித்து பேசிய ஸ்ருதிஹாசன், நான் 6 முறை காதலித்துள்ளேன், ஆனால் எந்த காதலும் கதையாக மாறவில்லை, மாறாக காயத்தை தான் கொடுத்துள்ளது.

இப்போது வரை நான் தனிமையாகத்தான் இருக்கிறேன், தற்போது நான் அமைதியை தேர்வு செய்துள்ளேன், எனக்கு இது பிடித்திருக்கிறது என உருக்கமாக பேசியுள்ளார்.

6 முறை காதல் என ஸ்ருதி கூறியுள்ளது பற்றி நெட்டிசன்கள் பரவலாக விமர்சித்தாலும், அவரது ரசிகர்கள் ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 40 வயதாகும் ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

Kamal shruti

தமிழில் விஜய் சேதுபதியுடன் ட்ரெயின் திரைப்படம் வெளியாக உள்ளது. அதே போல தெலுங்கு மொழியில் 2 படங்கள் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Amazon Link 2
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

1 COMMENT

Comments are closed.

Recent News

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...