கோவை: கோவையில் வடக்கு தொகுதி தே.ஜ கூட்டணி வேட்பாளர் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கோவை வடக்கு தொகுதிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கூட்டணி கட்சியினருடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சுர்மா மற்றும் அண்ணாமலை ஆகியோர் உடன் இருந்தனர்.
சுமார் ஒரு கிலோ மீட்டர் ஊர்வலமாக வந்த , கோவை வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன். வேட்பு மனு தாக்கலுக்கு பின்னர் வானதி சீனிவாசன் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
வேட்பு மனு தாக்கலுக்கு பின்னர் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் இன்று பாஜக நிறுவன நாள், வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார், இங்கு வந்து நான் பார்த்த வரை, தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) அமர்த்த வேண்டும் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என தெரிவித்தார்.
இங்குள்ள ஊழல் நிறைந்த அரசின் மீது மக்கள் சலிப்படைந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடு முழுவதும் எந்த அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டு வருகிறதோ, அந்த வளர்ச்சியைத் தமிழக மக்களும் விரும்புகிறார்கள், அந்த மாற்றத்தைத் தமிழகத்திலும் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என தெரிவித்தார். வானதி சீனிவாசன் நிச்சயமாக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் எனவும் தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து
வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், இன்று பாஜக துவங்கப்பட்ட நாள் எனவும் , இந்நாளில் வேட்பு மனு தாக்கல் செய்தது மகிழ்ச்சி. ராஜஸ்தான் முதல்வர் வந்ததற்கு நன்றி என தெரிவித்தார்.
வேட்புமனு தாக்கலுக்கு வந்த
கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி,
அண்ணாமலை அவர்கள் கலந்து கொண்டதற்கு நன்றி என தெரிவித்தார். பெண்கள் மிகுந்த அச்சத்துடன் தமிழ்நாட்டிலும் உள்ளார்கள் , என தெரிவித்த அவர், கோவை தெற்குத் தொகுதியில் மக்களுக்கான திட்டங்களை செய்துள்ளேன் எஸ்பி வேலுமணி அவர்ககாலத்தில் பல திட்டங்களை நிறைவேற்றினோம் எனவும் தெரிவித்தார்.
விஸ்வகர்மா சமுதாயத்திற்கு கொண்டுவந்த திட்டத்தை தமிழக அரசு முடக்கி வைத்துள்ளது என தெரிவித்த அவர், மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு முடக்கி வைத்தது எனவும் தெரிவித்தார்.
பிரதமர் தமிழகம் வரும்போது மாநிலத்திற்கு செய்த திட்டங்களை பட்டியலிட்டு சொல்கிறார், இதெல்லாம் ஸ்டாலினுக்கு தெரியவில்லையா என கேள்வி எழுப்பிய அவர்,
இந்த தேர்தலில் ஸ்டாலின் சொல்லும் பொய்களை மக்கள் நம்ப மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

