Coimbatore accident News: கணவன் கண்முன் பரிதாபம்; லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி மனைவி பலி

Coimbatore accident News: மொபட் மீது லாரி மோதி தூக்கி வீசப்பட்டதில், லாரியின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி, கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சூலூர் ராசிபாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் மணியன் (62). இவரது மனைவி சரஸ்வதி (55).

மணியன் நேற்று தனது மொபட்டில் மனைவி சரஸ்வதியை அழைத்துக்கொண்டு வெளியே சென்றார்.

இருவரும் சூலூர் அருகே நொய்யல் பாலம் பகுதியில் சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக மொபட் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அப்போது கீழே விழுந்த சரஸ்வதியின் தலை மீது லாரியின் பின்சக்கரம் ஏறியது.

இதில் தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே சரஸ்வதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர சம்பவம் கணவன் மணியன் கண்முன்னே நடந்தது.

மணியன் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.

இந்த விபத்து குறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பல்லடத்தை சேர்ந்த லாரி டிரைவர் அருள்சீலன் (46) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

வேட்புமனு நிராகரிப்பு- சாலையில் படுத்து உருண்டு போராட்டம் செய்த கோவை வேட்பாளர்…

கோவை: கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் சுயேட்சை வேட்பாளர் சாலையில் படுத்து போராட்டம் மேற்கொண்டார் கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்டது.இந்நிலையில் தலித்...

Video

கோவையில் கோழியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு- வனத்துறை மீட்பு…

கோவை: இக்கரை போளூவாம்பட்டியில் விவசாய நிலத்திற்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளூவாம்பட்டி பகுதியில், இன்று காலை விவசாயி ஒருவரின் வீட்டின் அருகே புகுந்த மலைப்...