மருதமலையில் கார்களுக்கு அனுமதி இல்லை – அறிவிப்பு!

கோவை: மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் வருகிற 14ம் தேதி நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஏப்ரல் 14ல் சித்திரை 1, தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.

Read news: சுங்கத்தில் பள்ளிக் குழந்தைகள் சென்ற ஆட்டோ மீது பஸ் மோதி விபத்து! – VIDEO

தமிழ் புத்தாண்டையொட்டி, அன்று அதிகாலை பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இதனைக் கருத்தில் கொண்டு மலைக்கோயிலுக்கு செல்லும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Read news: பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியதாக குற்றச்சாட்டு… காவலர் மீது இளைஞர் புகார்…!

Advertisement

பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும், திருக்கோயிலின் பேருந்து மற்றும் மினி பேருந்துகள் மூலமாகவும் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விழாவை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் செயல் அலுவலர் விமலா ஆகியோர் ஆய்வு செய்து வருவதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...