கோவை: திருப்பூரில் பிரச்சாரம் செய்வதற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வருகிறார்.
தேர்தலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தவெக தலைவர் விஜய் இன்று பெருமாநல்லூரில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.
இதற்காக இன்று மதியம் தனி விமானத்தில் கோவை விமான நிலையத்திற்கு வரும் விஜய், கொச்சின் – சேலம் ஆறுவழிச் சாலை மார்க்கமாக அவிநாசி செல்கிறார்.
மாலை 3 மணிக்கு அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் “U” டர்ன் எடுத்து மீண்டும் அதே வழியிலேயே பைபாஸ் திருப்பூர் சாலை சந்திப்பு வரை ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தொடர்ந்து கொச்சின் – சேலம் ஆறுவழிச்சாலை வழியாக பெருமாநல்லூ செல்கிறார்.
தொடர்ந்து அங்கு நான்கு ரோடு சந்திப்பில் மாலை 4 மணிக்கு வாகனத்தில் இருந்தபடி எட்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்
தொடர்ந்து பெருமாநல்லூர் – திருப்பூர் சாலையில் பூலுவபட்டி வரை சென்று “U” டர்ன் எடுத்து மீண்டும் பெருமாநல்லூர் நால் ரோடு வரை ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
பின்னர் சேலம் – கொச்சின் ஆறுவழிச்சாலை வழயாக கோவை விமான நிலையத்திற்குத் திரும்பும் விஜய், இன்று மாலை மீண்டும் சென்னை திரும்புகிறார்.
விஜய் வருகையை ஒட்டி கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.






Comments are closed.