அண்ணனைத் தொடர்ந்து தம்பியும் களம்… வானதி மகன் கைலாஷ் அதிரடி பிரச்சாரம்!

கோவை: கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் சிகிச்சையில் இருக்கும் நிலையில், அவரது மகன்கள் ஆதர்ஷ் மற்றும் கைலாஷ் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

ஏற்கனவே மூத்த மகன் ஆதர்ஷ் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று முதல் இளைய புதல்வர் கைலாஷ் தேர்தல் களத்தில் இவரை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கோவை, சங்கனூர் ​வார்டு எண் 46 A-க்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதிகளில், கைலாஷ் இன்று நேரில் சென்று வீடு, வீடாகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். தனது தாயின் உடல்நிலை குறித்து மக்களிடம் நெகிழ்ச்சியுடன் பேசிய அவர், தாமரைச் சின்னத்திற்குப் பேராதரவு வழங்கக் கேட்டுக் கொண்டார்.

“அம்மா விரைவில் குணமடைந்து மக்கள் பணிக்காக வருவார், அதுவரை அவரது பிரதிநிதியாக நான் உங்கள் கதவுகளைத் தட்டுகிறேன்” என அவர் பேசி வாக்கு சேகரித்தார்.

Advertisement

வாக்குச் சேகரிப்பு நிகழ்வின் போது, அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

வேட்பாளர் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் இருந்தாலும், அவரது இரு மகன்களும் தொகுதி முழுவதும் பிரிந்து சென்று தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து வருவது கூட்டணி தொண்டர்களுக்குப் புதிய உத்வேகத்தையும், உற்சாகத்தையும் கொடுத்து உள்ளது.

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் முடியும் தருவாயில் 24மணி நேர குடிநீர் திட்டம்- பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்…

கோவை: 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளதாகவும் கூடுதல் பணிகளை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...