கோவை: கோவை வந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு கோவை மக்களும் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று திருப்பூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்கிறார். திருப்பூர் மாவட்ட தமிழக வெற்றி கழக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்வதற்காக தனி விமான மூலம் கோவை வந்தடைந்த அவர் சாலை மார்க்கமாக திருப்பூர் புறப்பட்டார்.
கோவை விமான நிலையத்தில் இருந்து திறந்தவெளி வாகனத்தில் மேலே நின்றவாறு பொது மக்களையும் தொண்டர்களையும் பார்த்து கையசைத்து விசில் சின்னத்தை கையில் ஏந்தி வாக்கு சேகரித்துச் சென்றார்.
அப்பொழுது விமான நிலையம் வெளியே சித்ரா சாலையில் இருபுறமும் நின்று கொண்டிருந்த பொதுமக்களும் தமிழக கட்சி கழகத் தொண்டர்களும் ஆர்ப்பரித்து விசில் ஊதி கட்சி துண்டுகளை சுழற்றி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காவல்துறையினர் கயிறுகளை போட்டு தடுத்த பொழுதிலும் பலரும் அதனைத் தாண்டிச் சென்று விஜயை வரவேற்றனர்.


