விஜய் பத்திரிகையாளர்களை சந்திப்பு எப்போது? கோவையில் செங்கோட்டையன் பதில்!

கோவை: விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுப்பது ஏன் என்ற கேள்விக்கு, அதற்கான நேரம் வர வேண்டும் என்றும். அதைவிட்டுவிட்டு கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என்று சொல்ல முடியாது என்று எடப்பாடி பழனிசாமியை தாக்கி பதிலளித்துள்ளார் தவெக நிர்வாகி செங்கோட்டையன்.

Advertisement

தவெக தலைவர் விஜய் பெருமநல்லூரில் பரப்புரையை முடித்துவிட்டு, கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டுச் சென்றார். அப்போது அக்கட்சி நிர்வாகி செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சித் தலைவருக்கும் இல்லாத வரவேற்பு விஜய்க்கு உள்ளதாகவும், இதனால் மாற்றுக் கட்சிகள் அஞ்சி நடுங்கி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், விஜய் கை காட்டும் நபர் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுப்பது ஏன் என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டிய நேரம் வர வேண்டும். அது எப்போது வேண்டுமானாலும் வரலாம். நல்ல பதில்களைச் சொல்லும் நேரம், மக்களை நேசிக்கும் நேரத்தில் தான் சந்திக்க முடியும்.

Advertisement

அதைவிட்டுவிட்டு, கம்பராமாயணம் எழுதியது சேக்கிழார் என்று சொல்ல முடியாது என்று மறைமுகமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தாக்கிப் பேசினார்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

1 COMMENT

Comments are closed.

Recent News

லஞ்சம் வாங்கிய வழக்கில் முன்னாள் எஸ்.ஐ.க்கு 2 ஆண்டுகள் சிறை

2009-ஆம் ஆண்டு ரூ.1,500 லஞ்சம் வாங்கிய வழக்கில், முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ராஜாத்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து திருச்சி ஊழல் தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...