கோவையில் திமுக படையை அலறவிட்ட தவெக குட்டிப் படை! – வீடியோ

கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் திமுக பரப்புரையின் போது சிறுவர்கள் “TVK கெத்து” என கூச்சலிட்டதால் சிரிப்பும் சலசலப்பும் ஏற்பட்டது.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவையில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

வீடுவீடாகச் சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு கோரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

இந்த நிலையில் திமுகவினர் ராமநாதபுரம் பகுதியில் “போடுங்கம்மா ஓட்டு உதயசூரியனை பார்த்து” என கோஷமிட்டபடி பரப்புரை மேற்கொண்டு சென்றனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள தவெக (TVK) கட்சி அலுவலகம் அருகே அவர்கள் வாக்கு சேகரிப்பிம் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தவெக அலுவலகத்தில் இருந்த சிறுவர்கள் திமுகவினரை பார்த்ததும் விசில் ஊதி “TVK கெத்து” என கூச்சலிட்டனர்.

இதனால் அங்கு சிரிப்பும் சலசலப்பும் ஏற்பட்டது. தொடர்ந்து சிறுவர்கள் கூச்சலிட்டதால், திமுகவினர் அங்கிருந்து நகர்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த சுவாரசிய சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்களிடையே கவனத்தை ஈர்த்ததுடன், தற்போது சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

தவேக தலைவர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு குடும்பங்களிடத்தும் , சிறுவர்களிடத்தும் அரசியல் குறித்த பேச்சுகள் நடக்கிறது என்பது இந்த வீடியோ மூலம் தெளிவாகியுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

BREAKING NEWS: வால்பாறையில் கோர விபத்து; 9 பேர் பலி

வால்பாறையில் சுற்றுலா வேன் விபத்தில் 8 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Video