நடிகை திரிஷா செய்வது எல்லாமே டிராமா என பிரபல நடிகை கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.
முன்னணி நடிகை
நடிகை திரிஷா 1999ல் வெளியான ஜோடி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். பின்னர் 2002ல் வெளியான மௌனம் பேசியதே படத்தில் ஹீரோயினாக தமிழ் நெஞ்சங்களை கவர்ந்தார்.
தொடர்ந்து விக்ரம், சிம்பு, விஜய், அஜித் என அத்தனை நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். இதை தவிர தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து உச்ச நடிகையாக மாறினார்.

ரஜினி, கமல் என உச்ச நடிகர்களுடன் நடித்த திரிஷாவின் 2002ல் ஆரம்பித்த பயணம் இன்னும் ஓயவில்லை. இடையில் 2017ஆம் ஆண்டு படங்களே இல்லாமல் இருந்த திரிஷாவுக்கு 96 படம் பெரிய கம்பேக் கொடுத்தது.
சர்ச்சையில் சிக்கிய திரிஷா
இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வரும் திரிஷாவை சுற்றி இந்த வருடம் சர்ச்கைள் பல சுற்றி வருகிறது. விஜய்யிடம் அவரது மனைவி விவாகரத்து கேட்டது முதலே பல்வேறு சர்ச்சைகள் திரிஷாவை சுற்ற ஆரம்பித்தது.
சர்ச்சைகளுக்கு நடுவே ஒரே நிறை ஆடையில் இருவரும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றது மீண்டும் விவாதப்பொருளானது. தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் திரிஷா குறித்து பார்த்திபன் பேசியது பேசுபொருளானது.

மேலும் அரசியல் கட்சி தலைவர் ஒருவர் பேசியது முரண்பாடாக மாறியது. இருவருக்கு திரிஷா தனது பாணியில் பதிலடி கொடுத்தார். விஜய் ரசிகர்களோ திரிஷாவை வசை பாடத் தொடங்கினர்.
ஆனால் விஜய் இது குறித்து எந்த பதிலையும் கூறவில்லை. அரசியல் களத்தில் விஜய் பிஸியானது முதல் திரிஷா குறித்த பேச்சும் ஓய்ந்துள்ளது.
திரிஷா செய்வது டிராமா
இந்தநிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகைகள் திரிஷா மற்றும் ரம்யா கிருஷ்ணன் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் நடந்த உரையாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அந்த நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த ரம்யா கிருஷ்ணன், சிரிப்பூட்டும் விதமாக திரிஷாவை குறித்து, “திரிஷா பேச ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டார். நாம் தூங்கிப் போய் எழுந்தாலும், அவர் இன்னும் பேசிக்கொண்டே இருப்பார்,” என்று கலகலப்பாக கூறினார். இதைக் கேட்ட உடனே அங்கிருந்த அனைவரும் சிரிப்பில் மூழ்கினர்.
இதற்கு பதிலளித்த திரிஷா, “நான் ஒரு உணர்ச்சியோடு பேசிக்கொண்டிருப்பேன்,” என்று தன்னுடைய பக்கம் விளக்க முயன்றார். ஆனால் அதை உடனே மறித்த ரம்யா கிருஷ்ணன், “அது எந்த ஃபீலிங்கும் இல்லை… எல்லாமே டிராமாதான்!” என்று கிண்டலாக பதிலடி கொடுத்தார்.

இந்த லைட்டான நகைச்சுவை உரையாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, திரிஷாவே அந்த வீடியோவை தனது சமூக வலைதள ஸ்டோரியில் பகிர்ந்தது மேலும் கவனம் ஈர்த்தது. இவர்களின் நட்பு மற்றும் இயல்பான கலகலப்பான பேச்சு ரசிகர்களுக்கு இன்னும் அதிகம் பிடித்ததாக மாறியது.
இந்தச் சம்பவம், திரையுலகில் இருக்கும் நட்புகள் எவ்வளவு இயல்பாகவும் சிரிப்பூட்டுமாகவும் இருக்கும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக பார்க்கப்படுகிறது.


