எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் மீது இபிஎஸ் தரப்பு தாக்கு: அதிமுக பிளவு அம்பலம்!

கோவை: தவெகவுக்கு ஆதரவு தருவதாகக் கூறிய முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் மீது எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

Advertisement

இன்று காலை எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் தங்களது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, தங்கள் தரப்பு தவெக அரசுக்கு ஆதரவு கொடுப்பதாகவும், அதிமுக தொடர் தோல்வியால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இதற்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை, கட்சியை உடைக்கும் எண்ணமில்லை என்றனர்.

மேலும், இபிஎஸ் திமுக-வுடன் கூட்டணி அமைக்கப் பேசியது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது, பொதுச்செயலாளர் விரைந்து பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Advertisement

இதற்கு இபிஎஸ் தரப்பு அதிமுக கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. இதுகுறித்து அதிமுகவின் எக்ஸ் தளப்பக்கத்தில் குறிப்பிட்டிருப்பது:-

சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது!

திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?

Advertisement

அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா?

அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே?

பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா?

கழகம் யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்?

1,34,25,260 வாக்குகள் விழுந்தது நம் கழகத்திற்காக, நம் கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, எடப்பாடியார் என்ற மக்களின் முதல்வருக்காக!

அவர் போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, நம் கட்சியை, நம் தொண்டர்களை, நம்மை நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை, அதன் தொண்டர்களை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா?

நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்?

கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி அவர்களால் தான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்!

எடப்பாடியாரால் தான் தொண்டர்கள்! எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள்!

இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம்.

இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது.

இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்!

-தலைமைக் கழகம்

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ரசிகன் என்பதே முதல் அடையாளம்- ஜனநாயகனுக்கு வந்த அமைச்சர் சம்பத்குமார் பேட்டி…

கோவை: ரசிகன் என்பதே முதல் அடையாளம் என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். கோவை திரையரங்கில் டிஜே நிகழ்ச்சியுடன் ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் அமைச்சர் சம்பத்குமார் திரைப்படத்தை காண்பதற்கு வருகை புரிந்தார். இயக்குனர் வினோத்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...