நீட் தேர்வு வினாத்தாள் கசிவு- கோவையில் மாணவர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்…

கோவை: நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து கோவையில் மாணவர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

கடந்த மூன்றாம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்து சர்ச்சை எழும்பிய நிலையில் அந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது என்றும் கூடிய விரைவில் மறுபெயர்விற்கான தேதி அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் நீட் தேர்வு ஆரம்பித்த நாள் முதலே இது போன்ற பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவதாக குற்றம் சாட்டி வரும் கட்சியினர் நீட் தேர்வு என்பதையே ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நீட் தேர்வு நடைபெற்ற பொழுது லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் தற்போது அனைத்தும் பாழாகிவிட்டது என்று காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சியினர் தெரிவித்து இதனை முறையாக நடத்தாத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Advertisement

அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மாணவர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாநிலத் துணைத் தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று இதில் வலியுறுத்தப்பட்டது.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் முடியும் தருவாயில் 24மணி நேர குடிநீர் திட்டம்- பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்…

கோவை: 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளதாகவும் கூடுதல் பணிகளை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...