மூளைச்சாவு அடைந்த இளைஞர் உடல் உறுப்பு தானம் செய்து மூவருக்கு மறுவாழ்வு அளித்தார்…

கோவை: மூளைச்சாவு அடைந்த 22 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு மூன்று பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது.

Advertisement

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான இளைஞர் கருப்புசாமி. இவர் கடந்த மே 10-ஆம் தேதி காலை அவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


இந்தத் துயரமான சூழலிலும், கருப்புசாமியின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனர்.

Advertisement

இதை அடுத்து தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.


அவரது கல்லீரல் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் கோயம்புத்தூரில் உள்ள வேறொரு தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.

Advertisement

உடல் உறுப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, கருப்புசாமியின் உடலுக்கு மருத்துவமனை முதல்வர், மருத்துவ அதிகாரிகள் மற்றும் செவிலியர்கள் அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ரசிகன் என்பதே முதல் அடையாளம்- ஜனநாயகனுக்கு வந்த அமைச்சர் சம்பத்குமார் பேட்டி…

கோவை: ரசிகன் என்பதே முதல் அடையாளம் என அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார். கோவை திரையரங்கில் டிஜே நிகழ்ச்சியுடன் ஜனநாயகன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். மேலும் அமைச்சர் சம்பத்குமார் திரைப்படத்தை காண்பதற்கு வருகை புரிந்தார். இயக்குனர் வினோத்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...