கோவை: மாதம்பட்டியில் உள்ள தனியார் பாரில் வாங்கிய பீர் “பச்சைத் தண்ணீர் போல இருந்தது” என வாடிக்கையாளர் ஒருவர் புகார் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது.
மாதம்பட்டி பகுதியில் உள்ள பிரபல தனியார் பாரில் 230 ரூபாய் கொடுத்து வாங்கிய பீர், “பச்சைத் தண்ணீர் போல இருந்தது” எனக் கூறி வாடிக்கையாளர் ஒருவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பீர் சுவையில்லாமல் இருந்ததாக குற்றம்சாட்டிய அவர், “இந்தாங்க தல.. இந்த பீரை நீங்களே வச்சுக்கோங்க… என் 230 ரூபாய் போச்சு” என கூறி, பாட்டிலை அங்கேயே விட்டு சென்றார். அந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்த நிலையில், வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Read news:ரயிலில் தேவையின்றி அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்த 42 பேர்!
வீடியோ
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறுகையில், பாரில் வழங்கப்பட்ட மதுபானத்தில் வீரியம் இல்லாமல் இருந்ததாகவும், தண்ணீர் கலந்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
மேலும், அதிக விலைக்கு தரமற்ற மதுபானங்கள் விற்கப்படுகிறதா? அல்லது ஸ்டாக்கில் தண்ணீர் கலந்து மோசடி நடைபெறுகிறதா? என்ற சந்தேகங்களையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.
230 ரூபாய் வசூலித்து தரமற்ற பானம் வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், சம்பந்தப்பட்ட பார் மீது அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.



