கோவையில் இளம் பெண்ணை கர்ப்பமாக்கிய போலீஸ்காரர் கைது!

கோவை: திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய காவலர் கோவையில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பொள்ளாச்சி அருகே ஆனைமலை தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் பில்லூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார்.

இவர் பேரூர் அருகே ஒரு பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறி காதலித்து உள்ளார். இதை அந்த பெண் நம்பினார். இதையடுத்து அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி உள்ளனர்.

ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுடன் பலமுறை உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதில் அந்தப் பெண் கர்ப்பமானார். இந்த தகவல் காவலர் உதயகுமாருக்கு தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

Advertisement

Read news: எஸ்.பி.வேலுமணியின் கட்சிப் பதவி பறிப்பு!

இதையடுத்து வடவள்ளி மற்றும் அவிநாசி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்து உள்ளார். இதற்கு அந்தப் பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

Advertisement

பின்னர் காவலர் உதயகுமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது அந்த இளம் பெண்ணுக்கு தெரியவந்தது. அந்த பெண் காவலரிடம் “இப்படி என் வாழ்க்கையை நாசமாக்கி விட்டாயே” என்று கூறி இருக்கிறார்.

இதற்கு பதிலாக, “இதை நீ வெளியே சொன்னால் நாம் இருவரும் தனிமையில் இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன், கொலை செய்து விடுவேன்” எனவும் காவலர் மிரட்டி உள்ளார். இருப்பினும் அந்த இளம் பெண் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

read news: சிங்காநல்லூரைத் தொடர்ந்து கோவையில் மேலும் 10 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன… முதல்வர் விஜய் உத்தரவு அமல்

புகாரின் அடிப்படையில் காவலர் உதயகுமாரை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கி, கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து பேரூர் மகளிர் காவல் துறையினர் உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பேட்மின்டனில் வெற்றிக்கொடி நாட்டி சீனா செல்லும் கோவை வெங்கீஸ் பயிற்சி மைய மாணவி!

சேலத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி அனு ஸ்ரீ, கோவை வெங்கீஸ் பேட்மின்டன் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, சீனாவில் நடைபெறும் ஏசியன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்தியாவுக்காக பதக்கம் வெல்வதே தனது இலக்கு என தெரிவித்துள்ளார்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...