கோவை: பெட்ரோல் டீசல் கேஸ் விலையை குறைக்க வலியுறுத்தி கோவையில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோவையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
தற்போது நடைபெற்று வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் கேஸ் சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. கேஸ் சிலிண்டர்கள் பல்வேறு பகுதிகளில் தட்டுப்பாடு நிலவுவதால் தொழில் துறையினர் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
அதேசமயம் அந்நிய செலாவணியை குறைக்கும் நடவடிக்கைகளிலும் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. போர் பதற்றம் காரணமாக பெட்ரோல் டீசல் விலையும் தற்பொழுது மத்திய அரசால் உயர்த்தப்பட்டுள்ளது இது பல்வேறு மக்களுக்கும் தொழில் துறையினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு உடனடியாக எரிபொருளின் விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பு மக்களும் தொழில் துறையினரும் பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் எரிபொருளின் விலையை உடனடியாக குறைக்க வலியுறுத்திய மத்திய அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் CPF, AITUC, CITU. SDTU, MLF உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த முப்பதற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்தும் பெட்ரோல் டீசல் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்திய முழக்கங்களை எழுப்பினர்.



