கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த 3 பேர் கைது!

கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் வாலிபரிடம் கத்தி காட்டி பணம் பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்த சதீஷ் (30), கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

நேற்று அவர் தனது நண்பருடன் கணேசபுரம் பகுதியில் உள்ள அம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மூன்று பேர், சதீஷை வழிமறித்து பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் பணம் கொடுக்க மறுத்ததால், கத்தி காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.500-ஐ பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

Advertisement

இதுகுறித்து சதீஷ் சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த யுகேந்திரன் (22), போத்தனூர் மேட்டூரைச் சேர்ந்த முகமத் இஸ்மாயில் (28), மற்றும் போத்தனூர் பாரதி நகரைச் சேர்ந்த லிங்க பூபதி (22) என்பது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவையில் முடியும் தருவாயில் 24மணி நேர குடிநீர் திட்டம்- பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும்…

கோவை: 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளதாகவும் கூடுதல் பணிகளை நிறைவேற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...