கோவை அருகே ஆவின்பால் லாரி விபத்து- விரைந்த எம்.எல்.ஏ…

கோவை: கோவை அருகே ஆவின் பால் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Advertisement

கோவை அருகே பெ.நா.பாளையத்தில் ஆவின் பால் லாரி கவிழ்ந்து விபத்து
வண்டியில் இருந்த பால் டிப்பர்கள் சாலையில் விழுந்து சேதமடைந்தது. உடனடியாக எம்.எல்.ஏ. சுனில் ஆனந்த மீட்பு பணிகளை பார்வையிட்டார்.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் நள்ளிரவு 1 மணியளவில் ஆவின் பால் ஏற்றி வந்த மினி லாரி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இதில் வண்டியில் இருந்த பால் டிப்பர்கள் சாலையில் விழுந்து சேதமடைந்தது. சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த மீட்பு பணிகளை பார்வையிட்டார்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவை மேட்டுப்பாளையம் சாலையில் ராமகிருஷ்ணா அருகே உள்ள மேம்பாலத்தின் முன்பாக பேரூர் பச்சாபாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஆவின் பால் ஏற்றி வந்த வாகனம் நள்ளிரவு 1 மணிக்கு விபத்துக்குள்ளாகி தலைக்கு குப்புற கவிழ்ந்தது.

Advertisement

வாகனத்தை செந்தில்குமார் என்பவர் ஓட்டி வந்த நிலையில் விபத்தில் யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை. இதில் வண்டியில் இருந்த பால் டிப்பர்கள் சாலையில் விழுந்து சேதமடைந்தது. விபத்து நடந்த தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...