Coimbatore Weather Forecast | கோவை மக்களே… இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு…!

Coimbatore Weather Forecast: கோவையில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

கோவை மாவட்டத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்வதால், வெப்பம் தணிந்து, காலை நேரங்களில் குளுகுளு சீதோசன நிலை நிலவு வருகிறது. இது கோவை மக்களை குஷிப்படுத்தியுள்ள அதே நேரத்தில், கடந்த ஒரு சில நாட்களாக பகல் நேரத்தில் வெப்பம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

இதனிடையே, இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

Advertisement

வானிலை முன்னறிவிப்பின்படி, ஜூன் 5 முதல் ஜூன் 8 வரை கோவை மாவட்டத்தில் பகுதியளவு மேகமூட்டத்துடன் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பகுதியளவு மேகமூட்டத்துடன் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

எனவே, பொதுமக்கள் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இடியுடன் கூடிய மழை நேரங்களில் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவைக்கு பெருமை சேர்த்த ஐஐடி மாணவர்; Google AI போட்டியில் உலகளவில் வெற்றி

கூகுள் டீப்மைண்ட் உலகளாவிய ஏஐ ஆராய்ச்சி போட்டியில் கோவையைச் சேர்ந்த ஐஐடி சென்னை மாணவர் அர்ஜுன் திலக் ரூ.24 லட்சம் பரிசை வென்று சாதனை படைத்தார். அவரது வெற்றியை அமைச்சர் சம்பத் குமார் நேரில் பாராட்டினார்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...