கோவையில் பேருந்து பணிமனையை முற்றுகையிட்ட ஓட்டுநர், நடத்துனர்கள்…

கோவை: கோவையில் அரசு பேருந்து பணிமனையை ஓட்டுநர்கள், நடத்துனர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

கோவை சுங்கம் பகுதியில் உள்ள அரசு பேருந்து பணிமனையை முற்றுகையிட்டு ஓட்டுநர்கள், நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுநர்கள், நடத்துனர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு செய்யபட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துனர்கள் கோவை சுங்கம் பேருந்து பணிமனையை முற்றுகையிட்டும், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 4 ஆண்டுகளாக தற்காலிக ஓட்டுநர்களாகவே பணியாற்றி வருவதாகவும் நேற்று காந்திபுரத்தில் இருந்து குப்பனூர் நோக்கி பேருந்து எடுத்துச் சென்ற போது திடிரென பிரேக் டவுன் ஆனது. இது குறித்து உதவி பொறியாளரிடம் கூறிய போது நிரந்தர பணியாளர் இல்லை, தற்காலிக ஊழியர் தான என அலட்சியமாக பதிலளித்ததாகவும் கூறிய அவர்கள் பிரேக் டவுன் ஆன தொலைவை கணக்கு செய்து சம்பளத்திலும் பிடித்தம் செய்வதாகவும் கூறினர்.

Advertisement

இதனை அரசு பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் இல்லை எனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...