கோவையில் விறகு வெட்ட சென்ற முதியவர்- காட்டெருமையால் நேர்ந்த சோகம்…

கோவை: விறகு வெட்ட சென்ற இடத்தில் காட்டெருமை தாக்கி சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார்.

Advertisement

கோவை அருகே விறகு வெட்டும் வேலைக்கு இடத்தில் காட்டெருமை தாக்கி சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கோவை மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் 65 வயதான கிருஷ்ணசாமி. இவர் விறகு வெட்டும் வேலை செய்து வருகிறார். கடந்த 2ம் தேதி காலை மாங்கரை ரோட்டில் விறகு வெட்டும் வேலைக்கு சென்ற போது மரங்களுக்குள் மறைந்திருந்த காட்டெருமை ஒன்று கிருஷ்ணசாமியை தாக்கியுள்ளது.

இதில் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இது குறித்து தடாகம் போலிசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை கோவை அரசு மருத்துவமனையில் பிரதேச பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை வந்த இந்திய தேர்தல் ஆணையர்- தமிழ்நாட்டு மக்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பு…

கோவை: தமிழ்நாட்டில் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு நடந்ததற்கு மக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார். கோவை எட்டிமடை பகுதியில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்திய தேர்தல்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...