குழந்தையின் பெயரை பிறப்பு பதிவேட்டில் உடனடியாக சேர்க்க வேண்டும்- இந்திய தலைமை பதிவாளர் அறிவுறுத்தல்…

கோவை: பிறப்பு பதிவேட்டில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிறப்புப் பதிவுச் சட்டம்1969 (2023ல் திருத்தப்பட்டது)பிரிவு 14 மற்றும் தமிழ்நாடு பிறப்பு இறப்பு பதிவு விதிகள் 2025, விதி எண் 10ன் கீழ், குழந்தையின் பெயர் பதிவு செய்யும்போது விதி எண் 101ன்படி பிறப்பு நிகழ்வு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் குழந்தையின் பெயர் எவ்வித கட்டணமும் இல்லாமல் பிறப்புப் பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், 12 மாதங்களுக்கு மேல் 15 ஆண்டுகள் வரை ரூபாய் 200/- காலதாமதக் கட்டணம் செலுத்தி பிறப்புப் பதிவேட்டில் குழந்தையின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

தற்போது பிறப்புப் பதிவேட்டில் பெயர் இல்லாமல் பதிவு செய்யப்பட்டு 15 வருடங்கள் முடிவடைந்த அனைத்து பிறப்புப் பதிவுகளிலும் குழந்தையின் பெயரைச் சேர்க்க 26.09.2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய தலைமைப் பதிவாளர் இதுகுறித்து இனி கால அவகாசம் வழங்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

எனவே, கால அவகாசம் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

1 COMMENT

  1. Correct…but death certificate create ana udane automatic a Election id card cancel aganum… Ration card lendhu name delete aganum…. balance payment govt or pvt tharanum na immediately avunga account ku varanum… idhuku law Iruka…law is not only for public…it’s for govt also

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியம்…

கோவை: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பு துவங்க மானியம் வழங்கப்படுகிறது. தமிழக அரசு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை சுயதொழில் தொடங்கி தொழில்முனைவோர்களாக உருவாக்கும் பொருட்டு, அரசாணை எண்.80குறுசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை....

Latest News Coimbatore

Video

குளத்துப்பாளையம் மக்களே கவனம்- அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை:சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. குளத்துப்பாளையம் பகுதியில் சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி...