கோவை: கோவையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோயம்புத்தூர், கோயம்புத்தூர் (மகளிர்)ஆனைக்கட்டி, வால்பாறை மற்றும் பேரூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்ஸ், கம்ப்யூட்டர் மற்றும் அப்பேரல் தொடர்புடைய தொழிற்பிரிவுகள், டிரோன் பைலட், இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ், எலக்ட்ரிக் வெகிக்கிள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தொழிற்பிரிவுகளுக்கு 2026 ஆம் ஆண்டிற்கான ஆன்லைன் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது.
8/10/11/12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி டிப்ளமோ படித்த 14 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். பெண்கள் இப்பயிற்சியில் சேர உச்ச வயது வரம்பு இல்லை. இதற்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். ஜூன் 15 முதல் 30-ஆம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெற உள்ளது.
சேர்க்கையில் சேர விரும்புவோர் தங்களது 8ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ்,, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் கோவை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அந்த அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு சென்று நேரடியாக சேர்ந்து கொள்ளலாம்.
பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள்,சீருடை, பாடநூல், வரைபட கருவிகள்காலணி, பஸ் பாஸ் வழங்கப்படும். மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750/வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டத்தின்படி மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகையும் வழங்கப்படும். இப்பயிற்சிக்கான பயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசம். பயிற்சி முடித்து செல்லும் மாணவர்களுக்கு 100% வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களான கோயம்புத்தூர் (81220 47178), கோயம்புத்தூர் (மகளிர்) (97156 26813) ஆனைக்கட்டி (88383 39946)வால்பாறை (94421 75780)பேரூர் (93633 10633) மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்கோவை (99522 53597, 94990 55687) ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.


