கோவை: கோவையில் நடைபெற்ற சர்வதேச யோகா தினத்தில் ஆளுநர் பங்கேற்றார்.
சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படும் நிலையில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சிறப்ப விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் 1500க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்களோடு இணைந்து ஆளுநர் யோகா பயிற்சி செய்தார். பின்னர் இந்த நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய அவர், யோகா என்பது ஒருநாள் மட்டும் இல்லாமல், ஆண்டு முழுவதும் செய்ய வேண்டும் என்றார்
முன்னதாக பிரதமர் கலந்து கொண்ட சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் நிறைவாக சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் மகிழம் மரக்கன்றை ஆளுநர் நட்டு வைத்தார்.
இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆளுநர் அர்லேகர், பிரதமர் மோடி சீரிய முன்னெடுப்பால் சர்வதேச அளவில் யோக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், மனித குல நன்மைக்காக நமது யோக கலை உலகிற்கு இந்தியா அளித்த கொடை என்றும் தெரிவித்தார். யோகாவை அனைவரும் தினமும் கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.


