பிராணிகள் வதை தடுப்பு சங்கம்- உறுப்பினர் சேர்க்கை பற்றிய விவரங்கள்…

கோவை: பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை ஒரு மாதம் நடைபெற உள்ளது.

Advertisement

இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அறிவுறுத்தலின்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் முழு செயல்பாட்டில் செயல்படும் பொருட்டு புதியதாக கோயம்புத்தூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது.

பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் தலைவர்/ மாவட்ட ஆட்சியரின் தலைமையில் 07.01.2026 அன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் மேற்படி சங்கத்தில் புதிய உறுப்பினர்களை சேர்த்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தினை முழு வீச்சில் செயல்படுத்திடும் பொருட்டு சங்கத்திற்கு கால்நடைகள் மற்றும் விலங்குகள் மீது அன்பு செலுத்தும் நபர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் நபர்கள், அரசு அலுவலக பணியாளர்கள் மற்றும் பொது மக்களை உறுப்பினர்களாக இச்சங்கத்தில் இணைத்து முன்னேடுத்து செல்ல புதியதாக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

Advertisement

இந்த சேர்க்கை 01.07.2026 முதல் 31.07.2026 வரை நடைபெற உள்ளது. புதியதாக சங்கத்தில் சேருவதற்கு சாதாரண உறுப்பினர் ஆண்டு சந்தா தொகை ரூ.1000/- வீதம் மற்றும் ஆயுட்கால உறுப்பினர்கள் ரூ.5000/- வீதம் Coimbatore District (SPCA) என்ற பெயருக்கு வரைவோலையாகவோ அல்லது ரொக்கமாகவோ இஸ்மாயில் இராவுத்தர் வீதி டவுன்ஹாலில் செயல்படும் மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகம் மற்றும் கோயம்புத்தூர், கால்நடை பன்முக மருத்துவமனை, பிரதம மருத்துவர் அலுவலகத்தினை அணுகி, இரசீது பெற்றுகொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு தொலைபேசி எண்.0422-2381900 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.