உலக போதை பொருள் ஒழிப்பு தின பேரணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ்…

கோவை: யுனைடெட் பார்மசி கல்லூரி மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து
உலக போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி
சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் தொடங்கி வைத்தார்.

Advertisement

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு யுனைடெட் பார்மசி கல்லூரி மற்றும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இப்பேரணியை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி வாசித்து கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்து பங்கேற்றார்.

தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவியர்கள் கைகளில் போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர். பேரணியில் யுனைடெட் பார்மஸி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

பேரணியானது நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே தொடங்கி கோவை மேட்டுப்பாளையம் சாலையில் குமரன் மில்ஸ் வரை சென்று மீண்டும் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது.

பேரணியின் முடிவில் போதைப் பொருட்களுக்கு எதிராக வைக்கப்பட்டிருந்த பேனரில் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னுசாமி, யுனைடெட் கல்வி நிறுவன மேளாளர் சிவக்குமார், யுனைடெட் பார்மஸி கல்லூரி முதல்வர் அழகர் ராஜா மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் கையெழுத்திட்டனர்.

Advertisement

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் கூறும்போது.

சமூகத்தில் அனைவருக்கும் போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு இருக்க வேண்டும். மாணவர்கள்தான் எதிர்காலத்தில் முக்கியம். அவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதால் அவர்கள் எதிர்காலமும் இந்த தலைமுறையும் வேரோடு அழிக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் ஜோசப் விஜய் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்வில் இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து பாதுகாப்பது, குடும்பம், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என்றார்.

மேலும் கவுண்டம்பாளையம் தொகுதியில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ள மதுபான கடைகளை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

போதை இல்லா இளைஞர்கள் பாதுகாப்பான தமிழகம் என்ற இலக்கை நோக்கி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.

ஆய்வுகளின்படி இந்தியாவில் 6 மாணவர்களில் ஒருவர் போதைபொருள் போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகியுள்ளார். மேலும் இந்தியாவில் தினமும் சுமார் 40 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது கவலைக்கிடமான உண்மையாகும். எனவே மாணவர்களிடையே மனநல பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து வலுப்படுத்துவது காலத்தின் தேவையாகும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சரியாக கவனிக்காததால் தற்கொலை சம்பவம் அரங்கேறி வருவதாகவும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.


Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நாளை புரட்டாசியின் அபூர்வ பவுர்ணமி… குடும்பத்தில் நிம்மதி இல்லையா? இதை செய்யத் தவறாதீர்கள்…!!

கோவை: நாளை (செப்டம்பர் 26) புரட்டாசி மாதத்தின் 2வது சனிக்கிழமை மிகவும் விஷேசமானது என்பதோடு, அபூர்வ பவுர்ணமியும் கூடவே வருகிறது. இந்த நன்னாளில் பெண்கள் வீடுகளில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் குறித்து...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...