சூப்பர் ஸ்டாருக்கே அந்த நிலைமை ஏற்படுகிறது- கோவையில் நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்…

கோவை: தான் கூறிய கருத்தில் இருந்து பின் வாங்க மாட்டேன் என்று சமூக வலைத்தள சர்ச்சை குறித்து விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளியாகிய கட்டாகுஸ்தி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஜூலை 3ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கான பிரமோஷனுக்கக Broadway Cinemaவிற்கு வருகை புரிந்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் அங்கிருந்த பொது மக்களிடம் திரைப்படம் வெளியாவது குறித்து தெரிவித்தனர்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விஷ்ணுவிஷால் முதல் பாகம் எப்படி அனைவரும் ரசித்தீர்களோ இரண்டாம் பாகமும் அதுபோன்றே இருக்கும் என தெரிவித்தார். முதல் பாகத்தில் இருந்த முடி விஷயத்தை Re Create செய்ய இந்த முறை முயற்சி எடுக்கவில்லை என்றார். தன்னுடைய படங்கள் சென்னைக்கு அடுத்து கோவையில் நன்கு வரவேற்பு பெறுகிறது கோவை தனக்கு ஒரு லக்கிசாம்ப் என்றும் தெரிவித்தார்.

Advertisement

இந்த படத்தில் கிளைமாக்ஸ் இல் மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்று இருக்கிறது என்றும் தெரிவித்த அவர் இந்த படத்தின் கிளைமாக்ஸ் மிகப்பெரிய கிளைமாக்ஸ் அனைத்து கதாபாத்திரங்களையும் கொண்டு எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்தப் படத்தில் தான் முதல் முறையாக ஒரு அப்பா கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என்றும் அது தனக்கு மிகவும் சந்தோஷத்தை அளிப்பதாக கூறிய அவர் சாரா குழந்தை நடிக்கும் பொழுது பலமுறை காயங்கள் ஏற்பட்டதாகவும் இருப்பினும் அவர் உறுதுணையாக இருந்து அவரது கதாபாத்திரத்தை செய்துள்ளார் என்று தெரிவித்தார். இந்த படம் U சான்றிதழ் பெற்றிருப்பதாகவும் இதை நான் இங்கே குறிப்பிடுகிறேன் என்றும் தெரிவித்தார்.

நடிகர்கள் சுதந்திரமாக கருத்துக்களை சொல்ல முடிவதில்லை என்று விஷ்ணு விஷால் தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், என்னிடம் ஒரு இன்டர்வியூவில் சோசியல் மீடியா குறித்து கேட்டார்கள் அதில் ஒரு கமெண்ட் பற்றி கேட்டார்கள் அதற்கு விளக்கம் அளிக்கும்பொழுது ரஜினிகாந்த்தை எடுத்துக்காட்டாக கூறி பதில் அளித்தேன் யாரையும் குறிப்பிட்டு நான் பேசவில்லை அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாருக்கே ஒரு விளக்கம் தர வேண்டி இருக்கிறது அதுதான் தனக்கு வருத்தம் அளிக்கிறது என்றும் அது போன்ற ஒரு சூழலை சோசியல் மீடியா ஏற்படுத்துகிறது என்று பதில் அளித்தார்.

Advertisement

சமூக வலைத்தளத்தில் முதலில் யார் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார்களோ அது உண்மையாக்கப்பட்டு விடுகிறது அதற்கு நாம் பதிலளிக்கவில்லை என்றால் அதுவே உண்மையாகி விடுகிறது என்று வருத்தம் தெரிவித்தார்.

எவ்வாறு அனைவருக்கும் சுதந்திரம் இருக்கிறதோ அதே சுதந்திரம் நடிகர்களுக்கும் உள்ளது அப்படி இருக்கும் பொழுது நடிகர்கள் நாங்கள் பேசினால் மட்டும் அது பெரிதாகி விடுகிறது அது ஏன் என்று கேள்வி எழுப்பினார். எங்கு அன்பு அதிகமாக இருக்கிறதோ அங்கு சண்டைகளும் அதிகமாக வரும் அது போன்று தான் இந்த விவகாரத்தையும் நான் பார்க்கிறேன் சில சமயங்களில் குடும்பத்தை குறிப்பிட்டு பேசும்பொழுதும் கெட்ட வார்த்தைகள் பேசும் பொழுதும் தான் மனது புண்படுவதாக தெரிவித்தார்.

Auto immune அறிகுறிகள் எனக்கு கொரோனாவிற்கு பிறகுதான் தெரிய வந்ததாகவும் மருந்து எடுத்தால் பக்க விளைவுகள் வருகிறது அதை நிறுத்தியவுடன் தற்பொழுது எதுவும் இல்லை புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன் என்று தெரிவித்தார். கோவைக்கு வந்த பிரமோஷன் செய்தால் என்னுடைய படம் ஹிட்டாகிவிடும் என்பது என்னுடைய நம்பிக்கை என்றும் தெரிவித்தார்.

முதல்வர் விஜய் திரைத்துறை சார்ந்து செயல்படுவது குறித்தான கேள்விக்கு, தற்பொழுது 5 காட்சிகள் உயர்த்தப்பட்டுள்ளது ப்ரொடியூசர் கவுன்சில், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தில் இருந்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள் கண்டிப்பாக ஒவ்வொன்றையும் செய்வார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் இன்று காலை போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அவர் ஓடியதை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் 50 வயதை கடந்த ஒரு முதல்வர் மூன்று கிலோமீட்டர் ஓடும் பொழுது உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறார் அதெல்லாம் பார்க்கும் பொழுது நன்றாக பாசிட்டிவாக இருந்தது என்று தெரிவித்தார். மேலும் சினிமாவிற்கு பல்வேறு மாற்றங்கள் தேவைப்படுகிறது ஒவ்வொன்றாக அது நடைபெறும் என்று நம்புவதாக தெரிவித்தார்.

தனக்கு அரசியல் ஆசை இல்லை எனக்கு அரசியல் தெரியாது புரியாது என்ற அவர் கடந்த ஐந்து வருடங்களில் தான் அரசியலை புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன் நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய பிழைப்பை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. எனவே அரசியல் ஆசை எல்லாம் எனக்கு சுத்தமாக கிடையாது என்று தெரிவித்தார்.

ராட்சசன், முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை என்று அனைத்திற்கும் இரண்டாவது பாகம் என்பது உள்ளது ராட்சசன் இரண்டாவது பாகம் எப்பொழுது வரும் என்று என்னிடம் கேட்டால் எனக்கு இதுதான் தெரியாது அதற்கு நானும் காத்துக் கொண்டுதான் இருக்கிறேன் அதற்கு கதை உள்ளது இயக்குனர் எப்பொழுது ஆசைப்படுகிறாரோ அப்பொழுது அந்த படம் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில்,. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வந்த படத்தை காணலாம் என்றும் பைசா வசூலாக படம் இருக்கும் என்றும் கூறினார். இந்த படத்தில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே உள்ளவரை எதார்த்தமான உணர்வுகள் இருக்கும் என்ற சுட்டி காட்டிய அவர் அதற்கும் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஜனநாயகன் பார்த்து அழுவது ஏன்?- கோவை அமைச்சரின் உருக்கமான விளக்கம்…

கோவை: ஜனநாயகன் படம் பார்த்து அழுதது குறித்து அமைச்சர் சம்பத்குமார் விளக்கம் அளித்துள்ளார். கோவை மாநகராட்சி 83வது வார்டுக்கு உட்பட்ட வ.உ.சி., மைதானம் அருகே வாலிபால், கபடி மற்றும் இறகுப்பந்து போட்டிக்கான உள்ளரங்கு விளையாட்டு...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...