கோவை மாநகராட்சியில் மேலும் 2 நியாய விலைக்கடைகள்…

கோவை: கோவை மாநகராட்சியில் மேலும் இரண்டு நியாய விலை கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ.57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய 2 நியாயவிலைக் கடைகளையும், புதிய அங்கன்வாடி மையத்தினையும் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், முன்னிலையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்தியம் ஆகிய 5 மண்டலங்களுக்குட்பட்ட வார்டுகளில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.91க்குட்பட்ட சுகுணாபுரம் மேற்கு, கல்கி கார்டன் பகுதியில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையை மேயர், முன்னிலையில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர், திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நியாயவிலைப் பொருட்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, மேற்கு மண்டலம், வார்டு எண்.73க்குட்பட்ட பொன்னையராஜபுரம் பகுதியில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை மற்றும் வார்டு எண்.72க்குட்பட்ட அருணாச்சலம் வீதியில், ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடம் என மொத்தம் ரூ.57 இலட்சம் மதிப்பீட்டிலான நியாயவிலைக்கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் ஆகியவற்றை பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

புயலை கிளப்பும் கார் அறிவிப்பு விவகாரம்; தனி ரூட்டில் நம்ம கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி!

கோவை: அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, எம்எல்ஏக்கள் எத்தனை பேரிடம், எத்தனை கார்கள் உள்ளன? யார் யாரிடம் கார் இல்லை என்பது குறித்து தற்போது...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...