கோவை: தவெக ஆட்சியில் மூன்று வயது பெண் குழந்தைகள் கூட பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள் என்று பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன் தெரிவித்துள்ளார்.
கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபாகாலனி பகுதியில் கட்டப்பட்டு வரும் 1.2 கிமீ மேம்பால பணிகளை பாஜக தேசிய செயலாளர் தமிழக பொறுப்பாளருமான அரவிந்த் மேனன் நேரில் பார்வையிட்டார். மேம்பால ஒப்பந்த நிறுவனத்தினர் மற்றும் பொறியாளரிடம் மேம்பால பணிகளின் நிலைகள் குறித்தும் எப்பொழுது முடிக்கப்படும் என்று கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த மேம்பால பணிகள் நிறைவடைய போகிறது என்றார். மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தும் போது பெயர் மாற்றம் செய்யப்படுவதாகவும் குறிபிட்டார்.
இந்த மேம்பால பணிகள் நிறைவடையும் பொழுது மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழக ஆட்சி குறித்தான கேள்விக்கு, இந்த ஆட்சியில் மூன்று வயது பெண் குழந்தை கூட பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறது என்றும் மின்சாரத் துறையிலும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது இது போன்ற பிரச்சினைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம் என்று தெரிவித்தார்.


