கோவையில் PSG Fertility 360° திறப்பு: பொதுமக்களுக்கான சிறப்பு பட்டிமன்றம்

கோவை: PSG மருத்துவமனை சார்பில் கோவையின் முதல் முழுமையான கருத்தரிப்பு மையமான “PSG Fertility 360°” இன்று திறந்து வைக்கப்பட்டது.

Advertisement

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கருத்தரிப்பு சிகிச்சைகளை ஒரே இடத்தில் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் Andrology (ஆண் மலட்டுத்தன்மை சிகிச்சை), IVF (செயற்கை கருத்தரிப்பு), Reproductive Medicine, Male & Female Fertility Evaluation, Embryology, Fertility Preservation, கருத்தரிப்பு ஆலோசனை மற்றும் முழுமையான மலட்டுத்தன்மை சிகிச்சைகள் அனைத்தும் ஒரே கிளையின் கீழ் வழங்கப்படுகின்றன.

PSG மருத்துவமனையின் B Block Auditorium-இல் நடைபெற்ற இந்த விழாவில் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழா பாரம்பரிய குத்துவிளக்கு ஏற்றுதலுடன் தொடங்கியது. PSG Super Specialty Hospitals இயக்குநர் டாக்டர் ஜே.எஸ். புவனேஸ்வரன் வரவேற்புரை வழங்கினார்.

Advertisement
PSG Fertility 360 launch in Coimbatore.

தொடர்ந்து சிறுநீரகவியல் மற்றும் Andrology நிபுணர் டாக்டர் கிருஷ்ணமோகன் மற்றும் IVF நிபுணர் டாக்டர் ஆதிலட்சுமி ஆகியோர் PSG Fertility 360° மையத்தின் சிறப்புகளை விளக்கினர். ஆண் மற்றும் பெண் மலட்டுத்தன்மைக்கான முழுமையான பரிசோதனை, நவீன IVF சிகிச்சைகள், ஆண் கருத்தரிப்பு பிரச்சினைகளுக்கான Andrology சேவைகள், Fertility Preservation உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஒரே மையத்தில் கிடைப்பது இதன் முக்கிய சிறப்பம்சமாகும் என்று தெரிவித்தனர்.

விழாவிற்கு PSG விஷ்ணுகிராந்தி இயக்குநர் டாக்டர் கே. பானுமதி தலைமை வகித்தார். PSG College of Nursing முதல்வர் டாக்டர் ஆர். ஜெயதீபா மற்றும் பி.எஸ்.ஜி மருத்துவமனையின் *Nursing Superintendent டாக்டர் அனுராதா வாழ்த்துரை வழங்கினர்.

Advertisement

Endo Gynaecologist டாக்டர் எஸ். விஷ்ராந்தி நன்றியுரை வழங்கினார்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக, “குழந்தைச் செல்வங்கள் தாமதமாவது – சுய விருப்பமா? அல்லது காலத்தின் கட்டாயமா?” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்பு பட்டிமன்றம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

PSG Fertility 360 launch in Coimbatore.

தாமதமான திருமணம், மாறிவரும் வாழ்க்கை முறை, மனஅழுத்தம், உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல் மாற்றங்கள், ஆண் மலட்டுத்தன்மை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து மருத்துவ நிபுணர்கள் விரிவாக விளக்கமளித்தனர். கருத்தரிப்பு பிரச்சினைகளில் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் சம அளவில் பரிசோதனை அவசியம் என்பதையும், ஆண் மலட்டுத்தன்மைக்கான Andrology பிரிவின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.

Also Read: 75 வயதில் உடல் உறுப்பு தானம்- கோவை முதியவர் உடலுக்கு அஞ்சலி…

PSG Fertility 360° மூலம் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய IVF ஆய்வகம், Andrology சேவைகள், அனுபவமிக்க மருத்துவ நிபுணர்கள் மற்றும் நோயாளி மையப்படுத்தப்பட்ட முழுமையான கருத்தரிப்பு சிகிச்சைகள் இனி கோவையிலேயே கிடைக்கப்பெறவுள்ளன.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்- MLA கனிமொழி ஓபன் டாக்…

கோவை: கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசிய ஆதாரங்கள் எல்லாம் உள்ளது என்று எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார். கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் TVK 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற...

Video

காவல் நிலையம் அருகே உள்ள கோவிலில் கைவரிசை- கோவையில் அரங்கேறிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில், காவல் நிலையம் அருகே உள்ள உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலையம் அருகே அமைந்து இருக்கும் பிரபல ஸ்ரீ...