75 வயதில் உடல் உறுப்பு தானம்- கோவை முதியவர் உடலுக்கு அஞ்சலி…

கோவை: கோவையில் மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 75 வயதான கோபாலகிருஷ்ணன். இவர் கடந்த 1ம்தேதி சாலை விபத்தில் சிக்கினார். பலத்த காயம் அடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

Advertisement

அதனைத் தொடர்ந்து மூளைச்சாவு பற்றியும் உடல் உறுப்பு தானம் பற்றியும் மருத்துவர்கள் அவர்களது குடும்பத்தினரிடம் தெரிவித்ததை தொடர்ந்து குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதித்தனர்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி கோவை அரசு மருத்துவமனை முதல்வர் கீதாஞ்சலி ஆலோசனைப்படி அவரது ஒரு சிறுநீரகம் மற்றும் 2 கருவிழிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு தானமாக பெறப்பட்டது.

உடல் உறுப்பு தானம் செய்த கோபாலகிருஷ்ணனின் உடலுக்கு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் மரியாதை செய்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...