கோவையில் ஜவுளித்துறை வளர்ச்சி குறித்த ஆலோசனை!

கோவை: கோவையில் ஜவுளித் தொழில்துறை வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, SIMA தலைவர் மற்றும் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

கோவையில் ஜவுளித் தொழில்துறையின் வளர்ச்சி, புதிய முதலீடுகளை ஊக்குவித்தல், தொழில்துறையினர் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காணுதல் மற்றும் எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

Advertisement

இக்கூட்டத்தில் தமிழக தொழில்துறை அமைச்சர் திருமதி கீர்த்தனா, தென்னிந்திய பஞ்சாலைகல் சங்கம் (SIMA) தலைவர் , கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிரி பிரசாத், ஜவுளித் தொழில்துறையைச் சேர்ந்த முன்னணி தொழில்முனைவோர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Textile industry meeting in Coimbatore.

கூட்டத்தில் கோவை மற்றும் தமிழ்நாட்டின் ஜவுளித் தொழில்துறையின் போட்டித்திறனை உயர்த்துதல், புதிய முதலீடுகளை ஈர்த்தல், தொழில்நுட்ப மேம்பாடு, ஏற்றுமதி வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்துறையினரின் கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

Also Read: கோவையில் போலீஸ்காரர் எடுத்த தவறான முடிவு; சோகத்தில் குடும்பம்!

தமிழகத்தின் ஜவுளித் தொழில்துறையை உலகளவில் மேலும் வலுப்படுத்த அரசு மற்றும் தொழில்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் கீர்த்தனா வலியுறுத்தினார்.

மேலும், ஜவுளித் தொழில்துறையின் நிலையான வளர்ச்சிக்கும், கோவையை உலகத் தரத்திலான ஜவுளி உற்பத்தி மையமாக மேலும் முன்னேற்றுவதற்கும் அரசு முழு ஒத்துழைப்பை வழங்கும் என தெரிவித்தார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் பார்க்கிங்கில் இருந்த வாகனங்களின் சீட்டை கிழித்த நபர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை டவுன்ஹால் பகுதியில் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் இருக்கைகளை பிளேடால் சேதப்படுத்திய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.