கோவை: கோவையின் ஆவின் விற்பனையகத்தில் பால்வளத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை காந்திபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஆவின் விற்பனை மையத்தில் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக அமைச்சர்கள் பல்வேறு பகுதிகளில் தங்கள் துறை சார்ந்து சோதனைகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்திருந்தார். அப்போது திடீரென காந்திபுரம் பேருந்து நிலைய வளாகத்திற்குள் வந்த அவர் அங்குள்ள ஆவின் பால்பொருட்கள் விற்பனை மற்றும் தேநீர் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆவின் பால் பொருட்களின் இருப்பு மற்றும் விற்பனை விபரங்களை கேட்டறிந்தார்.மேலும் விற்பனை மற்றும் இருப்பு குறித்த பதிவுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
தொடர்ந்து ஒவ்வொரு பொருட்களையும் எடுத்து அதன் காலாவதி தேதி மற்றும் தயாரிப்பு தேதி ஆகியவற்றை சரிபார்த்து குளிசாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பால் பொருட்களின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். காலாவதியாகும் தேதி வரை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் மக்களுக்கு தேவையான பொருட்களை தரமாக விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.





