கோவை: கூடிய விரைவில் அதிமுக திமுகவில் 15 ஆட்களை தவிர வேறு யாரும் இல்லாமல் போய்விடுவார்கள் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
கோவை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர் இன்று மற்றும் ஞாயிற்றுக்கிழமை 2 தினம் பட்டமளிப்பு விழா இங்கு நடைபெறுகிறது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி மோகனா அவர்கள் இதில் கலந்து கொண்டது மிகப் பெருமையான ஒன்று என்றார்.
முதல்வரின் கரூர் பயணம் குறித்தான கேள்விக்கு கூடிய விரைவில் அதற்குரிய அறிவிப்புகள் வரும் அதுவரை பொறுத்திருங்கள் என்றார்.
ஆதிதிராவிடர் நலத்தூரில் சமூக நீதித்துறையாக பெயர் மாற்றியதற்கு திருமாவளவன் உட்பட பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருவது குறித்தான கேள்விக்கு இது பல ஆண்டுகளாக இருக்கக்கூடிய கோரிக்கை அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கை அந்த கோரிக்கையை ஏற்று இது மாற்றப்பட்டுள்ளது என்றார்.

ஆதவ் அர்ஜுனா பெயர் சேர்த்து சிபிஐ யிடம் திமுக புகார் அளித்திருப்பது குறித்தான கேள்விக்கு உச்சநீதிமன்றம் அவ்வளவு பெரிய வார்த்தையை சொன்ன பிறகும் இன்னும் திமுகவிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை என்றும் முதல்வர் கரூருக்கு செல்வதில் இவர்களுக்கு என்ன பயம்? சிபிஐ யிடம் என்ன மனு கொடுக்க முடியும்? ஆதவ் அர்ஜுனா மீது என்னதான் விசாரிக்க வேண்டும்? என கேள்வி எழுப்பினார்.
எதற்காக முதல்வர் கரூர் செல்லக்கூடாது என்று திமுகவினர் நினைக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பிய அவர் சிபிஐ அவர்களது வழக்கு விசாரணையை நடத்தி வருகிறார்கள் என்றும் திமுக சிபிஐ வைத்துக் கொண்டு என்னென்ன விளையாடினார்கள் முதல்வரை முடக்க பார்த்தார்கள் கட்சியை முடக்க பார்த்தார்கள் அனைத்திலும் தோற்றுப் போனார்கள்
எஃப் ஐ ஆர் கூட அந்த வழக்கறிஞர் குழு படிக்கவில்லை என்றார்.
அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் சிபிஐ வேண்டாம் என்று கூறிய நிலையில் தற்பொழுது எதற்காக சிபிஐ வேண்டும் என கூறுகிறார்கள் என்றார்.
கட்சியில் வேலை செய்வதற்கு ஆள் இல்லை என்றால் ஆர் எஸ் பாரதி அவராகவே சென்று புகார் அளிப்பார் அதற்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை என்றார்.மேலும் திமுக அதிமுக இரண்டும் சேர்ந்து எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தது இருவரும் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று பார்த்தார்கள் அதுவும் தோல்வி அடைந்தது இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த கட்சியில் ஆளே இல்லாத அளவிற்கு போய்விடும், 10, 15 ஆட்களைத் தவிர திமுக அதிமுகவில் ஆட்களை இல்லாமல் போய்விடுவார்கள் அந்த நிலைமையில் தான் தமிழக மக்கள் இவர்களை கொண்டு சென்று நிறுத்தியுள்ளார்கள் என விமர்சித்தார்
கூட்டணியில் இருந்து கொண்டு திருமாவளவன் விமர்சனம் பேசியது தொடர்பான கேள்வி, ஒரு சில விஷயங்களை என்ன கருத்தாக இருந்தாலும் நாங்கள் கேட்டுக் கொள்வோம் அதில் பெரிய பிரச்சினைகள் உள்ளது போன்று எனக்கு தெரியவில்லை, ஏற்கனவே கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது மீண்டும் இரண்டாவது முறையாக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுபவர்களுடன் வந்த உறவினர்களுக்கு முறையான ஏற்பாடுகள் செய்யாதது குறித்தான கேள்விக்கு அனைத்து ஏற்பாடுகளும் சரியாக தான் செய்யப்பட்டிருந்தது. அத்தனை பேரும் வரும்பொழுது அவர்களை சமாளிக்கும் இடவசதி இங்கு உள்ளதா என்பதை பார்க்க வேண்டும் தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு தான் இருந்தது என பதில் அளித்து புறபட்டார்.





