கோவையில் மேடையில் உணர்ச்சி மிகுந்து கண்கலங்கிய உச்சநீதிமன்ற நீதிபதி மோகனா…

கோவை: தமிழ்நாடால் தான் நான் சிறப்படைந்தேன் என உச்சநீதிமன்ற நீதியரசர் மோகனா தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் நீதியரசர் மோகனா உரையாற்றுகையில்,கோவை சட்ட கல்லூரிக்கு என் முதல்கண் நன்றி நான் இங்கு என் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை தற்போது அதற்கான அங்கி கொடுத்ததற்கு நன்றி என கண்கள் கலங்கியபடி தெரிவித்தார்.

Advertisement

புத்தக படிப்பு மட்டும் போதாது, வாழ்வில் பாடங்களை கற்று கொள்வோம் என்றார்.
நாங்கள் படிக்கும் போது இந்த அளவு வசதிகள் இல்லை உலக அனுபவே பெரிதளவு இல்லாமல் மூத்த வழக்கறிஞர்களிடம் இருந்து பணியாற்றி வந்துள்ளோம் என்றார்.

சட்டக்கல்லூரியில் மிக பெரிய மாற்றம் வந்துள்ளது என்றும் பெண்கள் அதிகம் பார்க்கும் போது பெருமையாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

அந்த காலத்தில் நீதிமன்றங்களில் பெண்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்தது தற்போது அது மாறியுள்ளது. இருப்பினும் இன்னும் வசதிகள் தேவை என்றார்.

புதிய சட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் அப்போது தான் சிறந்த சேவை செய்ய முடியும் என்று அறிவுறித்தினார்.
தற்போது இளைஞர்கள், வளர்ந்து வரும் வழக்கறிஞர்கள் பலமுறை கேள்விகளுக்கு பதில் அளிப்பது இல்லை என்ற அவர் உங்கள் மீது கிளைண்ட்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்றார்.

கோவிட் VC Practice செய்ய ஆரம்பித்து விட்டோம் பெண்களுக்கு அது பெரிதும் உதவி உள்ளது என்றும் VC போன்ற தொழில்நுட்பம் பெண்கள் நமக்கு கிடைத்த வர பிரசாதம் உங்களது நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துங்கள் என்றார்.

அலுவலகத்தில் உள்ள சீனியர் நமக்கு என்ன செய்வார் என்று நினைத்து வேலை செய்யாதீர்கள், நீங்கள் அனைவரும் மென்மேலும் உயர அனைவருக்கும் வாழ்த்துகள் தமிழ்நாடால் நான் சிறப்படைந்தேன் என்றார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...