கோவை: மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் குறித்த கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது.
மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் குறித்த கருத்தரங்கம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சமீபத்தில், இந்திய அரசு தொழிலாளர் விதிகள் தொடர்பான 29 சட்டங்களை ஒருங்கிணைத்து 4 புதிய தொழிலாளர் தொகுப்புகளாக (Labour Codes) மாற்றியுள்ளது. இது குறித்து வங்கிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு கருத்தரங்கம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மதுராந்தகி மற்றும் தொழிலாளர் நல வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மத்திய தொழிலாளர் ஆணையத்தின் துணைத் தலைவர் ஸ்ரீநுதாரா, தொழிலாளர் அமலாக்க அலுவலர் ரமேஷ் குமார், மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கியின் முதுநிலை மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகள் குறித்து விரிவாக விளக்கினர்.
இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வங்கிகளின் உயர் அதிகாரிகள் மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகள் குறித்த பல்வேறு சந்தேகங்களை கேட்டறிந்தனர்.





