கோவையில் அனைத்து மாணவர்களும் உயர்கல்வி சேர்வதற்கு ஆய்வுக் கூட்டம்…

கோவை: அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி சேர்ப்பதை உறுதி செய்ய ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

Advertisement

கோயமுத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி சேர்ப்பதை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர், உயர்கல்வியில் சேர்ந்துள்ள பெற்றோர் இல்லாத அல்லது பெற்றோர்களில் எவரேனும் ஒருவர் 30 மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.3 இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி)சங்கேத் பல்வந்த் வாகே, மாநகராட்சி துணை ஆணையர் குமரேசன், மாவட்ட வருவாய் அலுவலர் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் லட்சுமி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ மாணவியர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

அதன்படி, கோயமுத்தூர் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த அனைத்து மாணவர்களையும் உயர்கல்வியில் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு கண்காணிப்பு குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதுகோயமுத்தூர் மாவட்டத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 11353 மாணாக்கர்களில், 10,408 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் அவர்களில் உயர்கல்வி சேராத 232 மாணவர்களை தொடர்ந்து கண்காணித்து, தற்போது நடைபெறும் சிறப்புத் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை உயர்கல்வியில் சேர்த்துவதற்கு தக்க நடவடிக்கைகள் எடுக்குமாறும் தேர்வுக்கு வராத மற்றும் தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களை ITI பாலிடெக்னிக் போன்ற திறன் பயிற்சி மையங்களில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

மேலும், உயர்கல்வி சேர்க்கையில் நம் மாவட்டமானது மாநிலத்திலேயே இரண்டாம் இடம் (85 சதவீதம்) பெற்றுள்ளது. இந்நிலையை உறுதுணையாக இருந்த அனைத்து நிலை அலுவலர்களுக்கும் எனது பாராட்டுக்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...