கோவை: ஜூலை 16ம் தேதி கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூலை 16, 2026 (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கிணத்துக்கடவு மற்றும் சிட்கோ (குறிச்சி) துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட நேரத்தில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். பொதுமக்கள் அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உக்கடம் மேம்பாலத்தில் ஆளில்லாமல் சென்ற பைக்; பரபரப்பு வீடியோ வைரல்
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
கிணத்துக்கடவு (Kinathukadavu) துணை மின் நிலையம் :-
சுலக்கல் (Sulakkal), தாமரைக்குளம் (Thamaraikulam), ஓ.கே.மண்டபம் (O.K. Mandapam) பகுதி, மன்றாம்பாளையம் (Mandrampalayam), கொண்டம்பட்டி (Kondampatty).
சிட்கோ (குறிச்சி) [SIDCO (CBE Kurichy)] துணை மின் நிலையம் :-
சிட்கோ (SIDCO), சுந்தராபுரம் (Sundarapuram) பகுதி, போத்தனூர் (Podanur) பகுதி, எல்.ஐ.சி காலனி (LIC Colony), காமராஜ் நகர் (Kamaraj Nagar).
மின் தடை நேரம்:
காலை 9:00 மணி – மாலை 5:00 மணி
கோவை செய்திகள் மற்றும் நம் ஊருக்கான அறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது வாட்ஸ்-ஆப் குழுவில் இணைந்து கொள்வீர்… 👉





